உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

❖ 21❖ மறைமலையம் – 21

துவாக்களும் ஆண்டுக் கூறப்பட்டமையும் இனிது விளங்கா நிற்கும்.

இனி,

இருக்குவேத வழியதான போதாயந கற்ப சூத்திரத்தில் முப்புரம் எரித்த இறைவன் வழிபாடு முதலியன நுவலப்படுதலின், சிவவழிபாடுஞ் சிவபிரான் திருக்கோயில் அத்திருக்கோயிற் றிருவிழா முதலியனவும் வேதத்திற் குறிப்பிக்கபட்டனவேயாதல் பெறப்படும்.

இவ்வாறு வேதங்களிற் சுருக்கமாக வைத்துரைக்கப் பட்ட சைவ சமயப் பொருள்கள் ஆறுஞ் சிவாகாமங்களில் விரிவாக விளக்கிச் சொல்லப்படுதலின், வேதமுஞ் சிவாகமும் இவ்வாற்றால் ஒன்றேயாதல் பெறப்படும்.

இனிக், கூர்மபுராணத்திற் சிவபிரானுந் திருமாலும் மயக்க நூல்களை உண்டாக்கினார்களென்பது சொல்லப் பட்டமையின், சிவபிரான் அருளிச் செய்த சிவாகமங்கள் கொள்ளற்பாலன அல்லவெனின், அக்கூர்மபுராணமே, பாசுபதவிரதத்தைத் தெரிவிக்கும் ஆகமமந்திரங்கள் வேதத்தி னின்றும் பிழிந்தெடுத்த சாறாமென்றும், வீடுபேற்றை விரும்பினவர்கள் அவற்றை ஓதற்பாலராவரென்றுங் கூறு

தலின், அப்புராணத்தால் விலக்கப்பட்ட மயக்கநூல்கள் சிவாகமங்கள் அல்லாமை தெற்றென விளங்கா நிற்கும். அற்றேல், அதனால் விலக்கப்பட்ட மயக்கநூல்கள் யாவையோ வெனின், பிணச்சாம்பல், மக்களின் எலும்பு தலையோடு முதலியவைகளை உடல் மேல் தாங்குதல் வேண்டுமெனக் கற்பிக்கும் ‘வாமபாசுபதம்' என்னும் மதத் தையும், ஆசிரியன் மனைவியைப் புணர்தல் முதலான கொடிய செயல்கள் குற்றம் ஆகாவெனக் கிளங்கும் 'சௌம மதத்தையும், மண்டையோடுகைக் கொளல் கட்குடித்தல் முதலிய தீயசெயல்களைச் செய்யுமாறு நுவலும் ‘லகுலீச பைரவமதங்களையும் பற்றிய நூல்களே மயக்க நூல்களென அதனால் விலக்கப்பட்டமை பகுத்தறிந்து கொள்ளற்பாற்று. அற்றாயின், இத்தகைய தீய நூல்களை இறைவனே அருளிச் செய்தானெனக் கரைந்தது ஏன் எனின், தீய ராய அசுரர் களை மயக்கி அழித்தற்பொருட்டு இறைவனே அவற்றை அருளினனென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/179&oldid=1587286" இலிருந்து மீள்விக்கப்பட்டது