உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

145

சங்கராசாரியார் முதலான உரைகாரரேயாவர், அவர் கூறிய அவ்வுரைகொண்டு, சைவசித்தாந்தமுஞ் சிவாகமங்களும், வேதாந்தமான உபநிடதங்களுக்கு மாறாகும் எனக் கரைவது பொருந்தாது. இன்னுஞ் சங்கராசாரியார்க்கு முன்னே 'வேதாந்த சூத்திரத்திற்கு உரை வருத்தவரான நீலகண்ட சிவாசாரியாரே, “யாம் வேத சிவகமங்களுக்கு வேற்றுமை கண்டிலம், வேதமுஞ் சிவாகமம் எனப்படும்” என 38ஆஞ் சூத்திரவுரையில் நன்கெடுத்துக் கூறினர்.

னி, வேதங்களிலுஞ் சிவாகமங்களிலுங் கூறப்பட்ட பொருள்கள், பதிபசு பாசம் என்னும் முப்பொருள் இலக்கணங்களும், பஞ்சப் பிரமமந்திரங்களும் ஆறு அத் துவாக்களினியல்புகளும், இவ்வழிபாட்டிலக்கணங்களும் சிவபிரான் திருக்கோயில் இலக்கணங்களும் அத்திருக் கோயிலிற் செய்யப்படுந் திருவிழாச் சிறப்புகளும் ஆம் என்பதனை நாயகரவர்கள் விளக்குவான் புகுந்து, முதலில் வேதவுரைகளை எடுத்துக் காட்டுன்கிறார்கள்.

“இரண்டு காலும் நான்கு காலும் உள்ளவைகள் பசுவெனப்படும் “அப்பசுக்களுக்குப் பதியாவான் உருத்திரமூர்த்தியேயாகும்"

(இருக்குவேதம் 10, 121, 3)

“பதியாகிய சிவபிரானை அறிந்தவர்கள் எல்லாப் பாவங்களினின்றும் நீங்கி, எல்லாக் கவலைகளும் ஒழிந்து, பிறப்பு இறப்புக்களைக்

கடந்து வீடு பேறெய்துவர்.’

(சுவேதா சுவதரோபநிடதம், 1-11)

“சிவஞானத்தை எய்தின புலவர்கள் குடும்பபாசத்தைக் கொளுத்துவர்” (கைவல்யோபநிடதம், 11)

இனி, எசுர் ஆரணியகத்தில் அடங்கியுளதான நாராயண பிரசி நசத மந்திரத்தில் ‘சத்யோஜாதம்' முதலான சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களை நோக்கி வழிபடும் வணக்கங் காணப்படுதலின் பஞ்சப் பிரம மந்திரங்கள் வேதத்தினும் உளவாதல் தெளியப்படும்.

அங்ஙனமே, ஆறத்துவாக்களுக்குப் பதியாகிய உருத்திரரே! எனவேதம் இறைவனை விளித்தலின், ஆறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/178&oldid=1587285" இலிருந்து மீள்விக்கப்பட்டது