உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

5. வேதாந்த சூத்திரத்தில் விலக்குண்ட பாசுபத பாஞ்சராத்திர மதங்கள்

வேதாந்த சூத்திரத்தில் 'பத்யுரசாமஞ்ஜஸ்யாத்' என்னுஞ் சொற்றொடரால் இறைவனை நிமித்த காரணன் எனக் கூறும் பாசுபதமதத்தை வியாசர் மறுத்துக் கூறுதலின், பாசுபதமுஞ் சிவாகமங்களும் ஒப்புக் கொள்ளற்பாலன அல்ல என்று சங்கராசாரியர் அதற்கு உரை கூறியிருத்தலை அவ் வைணவர் எடுத்துக் காட்டினர்.

ம்

அதற்கு நாயகர் கூறும் மறுப்பு: 'இறைவன் உலகின் வேறாய் நின்று அதனைப் படைப்பான் எனப் பகர்வாரை வியாசர் மறுத்தனரேயன்றிச் சிவபிரானையுஞ், சிவாகமங் களையும், அதன்கண் எள்ளளவுங் குறைத்துப் பேசிற்றிலர். அங்ஙனமாகவுஞ், சங்கராசாரியர் கடவுளும் உலகமும் ஒன்றேயென்னுந் தமது மாயாவாதக் காள்கையை அச்சூத்திரத்தில் நுழைத்தல் வேண்டிப் பாசுபத மதத்தை அங்கே கொணர்ந்து அதனை அவர் மறுத்தாற்போலவே, 2- ஆம் அத்தியாயத்து 2-ஆம் பாதத்து 44ஆஞ் சூத்திர வுரையில் வைணவ மதத்தையுங் கொணர்ந்து மறுத்திருத் தலின், சங்கராசாரியாருரை, சைவர் வைணவரிருவர்க்கும் உடம்பாடாகாதென்பது அறியற்பாற்று.

மேலுங், கடவுளை நிமித்த காரணராகக் கொள்வார் எவராயினும் அவரெல்லாரையும் வியாசர் ஒருங்கே மறுத்திருக்கின்றனர். சைவர்களிலிருந்து புதிது தோன்றிய ‘பாசுபதர்’ என்னும் ஒரு சாரார் கடவுளை நிமித்த காரணராக மட்டும் வைத்துரைப்பது பொருந்தாதாகலின், அவரை மறுத்தற்குப் 'பத்யுரசாமஞ்ஜஸ்யாத்' என்னுஞ் சூத்திரம் எழுந்ததெனக்

து

கூறினவர்கள் நீலகண்ட சிவாசாரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/177&oldid=1587284" இலிருந்து மீள்விக்கப்பட்டது