உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

143

ஆகவே, வடமொழியில் வைணவர்களாற் புதியவாய் படைத்து நுழைக்கப்பட்ட புராணப் புரட்டுரைகளை எடுத்துக்காட்டிப் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளிலக்கணங்களை உலகிற்கு விளக்கிக் காட்டுதலே தமக்குரிய இன்றியமையாக் கடமையாக நினைந்து நாயக ரவர்கள் தமது இருபத்தேழாம் ஆண்டிற் சிவாதிக்ய ரத்நாவளி முதற்பாகத்தை இயற்றி வெளியிடலானார்கள்.

இந்நூலுக்கு முன்னும் இராமாநுஜமதசபேடிகை எனப் பெயரிய ஒரு நூல் நாயகரவர்களால் இயற்றப்பட்டு வெளி வந்தமை, 'சிவாதிக்யரத்நாவளி' முதற்பாகத்தில் அதனை அவர்கள் குறித்திருப்பதனால் அறியப்படுகின்றது. ஆயினும், அந்நூல் எமக்குக் கிடைத்திலாமையின், அதனைப் பற்றி ஏதுஞ் சொல்லுதல் இயலவில்லை.

இனிச் 'சிவாதிக்யரத்நாவளி' முதற்பாகம் நாயகரவர் களது புத்திளமைக் காலத்திற் பெரிதாராய்ந்தெழுதப்பட்ட அரிய மறுப்புரை நூலாக விளங்குதலால், அதன்கட் பொதிந்த அரும்பொருள்கள் சிலவற்றை ஈண்டெடுத்துச் சுருக்கிக் காட்டுதும், அவைகொண்டு நாயகரவர்களின் அரும்பெரும் புலமையும் ஆராய்ச்சித் திறனும் அவர்கள் சைவ சமயவிளக்கத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின் விழுப்பமும் எவரும் எளிதிலுணர்ந்து பயன் பெறலாமாகலின்,

சென்னையிலிருந்த பொன்னப்பபிள்ளை யென்னும் பெரியார் ஒருவர், அக்காலத்திருந்த வைணவர் சிலர் சிவபிரானை இழித்துப் பேசிய இழிப்புரைகளைக் கேட்டு மனம் பொறாராய், “மூடமதிகண்டனம்” எனப் பெயரிய ஒரு மறுப்பு நூல் எழுதி வெளியிட்டனரென்றும், அது கண்ட ‘நாக பட்டினம் இராமாநுஜ சித்தாந்த சபையார்’ தூண்டுதலின் மேல் ஒரு வைணவர் 'நன்மதி விளக்கம்' எனப் பெயர் தந்து அதற்கோர் எதிர் மறுப்பு வெளியிட்டனரென்றும், அவ்வெதிர் மறுப்புக்குப் பெருமறுப்பாகவே நாயகரவர்கள் சிவாதிக்ய ரத்நாவளி இயற்றி வெளியிடலாயிற்றென்றும் நாயகரவர் களே இந்நூற் றுவக்கத்தில் இந்நூல் வரலாறு தெரிவித்திருக் கின்றார்கள்.

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/176&oldid=1587283" இலிருந்து மீள்விக்கப்பட்டது