உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் – 21

நெற்றி மண் பூசுவாரிலும் ஒரு கூட்டத்தினர் நடுவிற் செம்மண்ணும் அதன் இருபுறத்தும் வெள்ளை மண்ணும் பூசா நிற்க, மற்றொரு கூட்டத்தினர் 'நடுவில் மஞ்சள் மண்ணும் பக்கங்களில் வெள்ளை மண்ணுங் குழைத்து இடுகின்றனர்! இன்னும், வைணவரில் ஒரு பெரும் பகுதியினர் நெற்றியிற் காலிழுத்த நாமந் தீட்டிக் கொண்டு தம்மைத் 'தென்கலையார்’ என்று சொல்லிக் கொள்ள, மற்றொரு பகுதியினர் கால் இன்றி வளைத்த நாமம் தீட்டிக் கொண்டு தம்மை ‘வட கலையார்’ என்று று வழங்கிக் கொள்கின்றனர். அதுவேயுமன்றி, இத் தென்கலை வடகலைக் கூட்டத்தினர் தத்தங் கொள்கையே உண்மையெனப் பகர்ந்து தமக்குப் பெரிதும் இகலித் தீராப் பெருபோர் புரிந்தும் வருகின்றனர். இங்ஙனமெல்லாஞ் சைவ சமயத்தொடுமாறுபட்டும், அங்ஙனம் அதனொடு மாறு பட்டாலுந், தமக்குள்ளாவது ஓர் ஒற்றுமையுடையவராய் வாழாமல் தமக்குள்ளேயே பலவேறு வகையினராய்ப் பிளவு பட்டுக்கலாம். நிகழ்த்துவாரான இப்பல்வேறு வைணவக் குழுவினருந், தாந்தாம் புதிய புதிய வாய்ப் படைத்த கொள்கை களையும் பழக்கவழக்கங்களையும் நிலைநிறுத்துவான் புகுந்து அவைகளுக்கேற்ற பொய்யுரைகளையும் பொய்க்கதை களையும் வரவர மிகுதியாய்ப் படைத்து வடமொழியிற் பல நூல்களை இயற்றியுஞ் சிலவற்றை வடமொழிப் பழைய நூல்களில் நுழைத்தும் பெரியதொரு குழப்பத்தையுந்தலை தடுமாற்றத்தையும் உண்டாக்கலாயினர். தென்றமிழ் ஆரிய நூற்பழங் கொள்கைகளையும் பண்டைக்கால நன்மக்களின் பழக்க வழக்கங்களையும்உண்மையான் ஆராய்ந் துணர்ந்த சைவ சமயப் பெரியார்கள் பிற்காலத்து வைணவர்கள் செய்யுஞ் சமயப்புரட்டுகளைக் கண்டு அருவருத்து, அவையிற்றைச் சிறிது சிறிதா எடுத்து வெளிப்படுத்தி உலகில் உண்மையை விளக்கத் துவங்கவே, சைவ சமயத்திற்கும் வைணவத்திற்கும் வேற்றுமையும் பகையும் விளையலாயினவென்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். இச்சமயப் பூசலில் வைணவர்கள் சைவர்களைப் பகைத்தாற்போற், சைவர்கள் வைணவர்களைப் பகைத்திலாமை இருவர்தம் பழக்க வழக்கங்களையுஞ் சிறிது நோக்கினாலும், நேரே நன்கறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/175&oldid=1587282" இலிருந்து மீள்விக்கப்பட்டது