உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

141

காலங்களில் தம் நெற்றியிலும் உடம்பிலுந் திருநீற்றையே பூசி வந்தனர். இவ்வுண்மை,

“கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடங்கண்ணன்

எனவும்

"நீறு செவ்வே இடக் காணின் நெடுமாலடியார் என்று ஓடும்’

(ஏறியபித்தினோடு என்னும் செய்யுள்) எனவும் நம் ஆழ்வார் தாம் பாடிய பாடல்களிற் கூறுமாற்றால் நன்கு விளங்கா நிற்கும். இன்னுந் தமிழ்நூல்களின் மட்டுமேயன்றி, வடமொழியிற் சிறந்த அறிவுநூல்களாக வைத்துப் பாராட்டப்படும் “அதர்வசிரசு' 'அதர்வசிகை', 'கைவல்யம்', காலாக்நிருத்ரம்', 'சுவேதாசுவதரம்’, 'பஸ்மஜாபாலம் ருத்ராக்ஷஜாபாலம்', ‘ப்ருஹஜ்ஜாபாலம்' முதலான உப நிடதங்களுந் திருநீறு, உருத்திராக்கம் அணிதலையே புகழ்ந்தெடுத்துப் போற்றுகின்றன. அதுவேயுமன்றி, 'ராமரஹஸ்யோபநிஷத்' இராமர் தமது உடலமெங்குந் திருநீறு பூசியிருத்தலையும், 'ஸான்டில் யோபநிஷத்’ தத்தாத்திரேயர் அங்ஙனமே தமது திருமேனி முழுதுந் திருநீறு அணிந் திருத்தலையுஞ் சிறந்தெடுத்துக் கூறுகின்றன.

இவ்வாறாக வடமொழி தென்மொழிப் பழைய நூல் களும், வைணவ ஆழ்வார்கள் பாடிய பாட்டுகளும் எல்லாந் திருநீற்றுப் பூச்சினையே சைவ வைணப் பெரியார் அனைவரும் மேற்கொண்டிருந்த வரலாற்றினை விளக்கமாய் எடுத்துக் கூறா நிற்கவும், ஆழ்வார் கட்குப் பின் வந்த இராமாநுசர் முதலான வைணவ ஆசிரியர்கள் அவற்றிற்கு மாறாக, நெற்றியில் மண்பூசும் ஒரு புதிய வழக்கத்தை உண்டாக்கித் தெய்வ வழிபாட்டின் மட்டுமேயன்றிப் பழக்கவழக்கங்களிலும் வேற்றுமையின்றி ஒரு தொகுதியினராயிருந்த நந்தமிழ் மக்களைத் தெய்வவழிபாட்டில் வேறாக்கி ஒருவரையொருவர் பகைத்துப் போராடுமாறு செய்து வைத்ததுமல்லாமல், அவர்களில் ஒரு குழுவினர் நெற்றியில் மண் பூசி வேறு தனியராய் நின்று கலாம் விளைக்குமாறுஞ் செய்துவிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/174&oldid=1587281" இலிருந்து மீள்விக்கப்பட்டது