உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் – 21

பங்குக்கு மேற்பட்டவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் களாகவேயிருத்தலை இன்றுங் காணலாம், மேலும், வைணவ மதத்திற்குரிய கண்ணன். இராமன், நாராயணன் முதலிய பெயர்களைச் சைவ சமயத்தவர்களில் எத்தனையோ பலர் பூண்டிருத்தலை நாளுங் காணலாம். அதுபோல, வைணவமதத்தினரில் ஒருவராவது சிவன், முருகன், சங்கரன், சம்பு, ஆறுமுகன், விநாயகன் வீரபத்திரன் முதலான சைவ சமயப் பெயர்களை பூண்டிருத்தல் சிறிதாயினுங்காணல் இயலுமோ? இயலாதே சைவ சமயிகள் எல்லா மதத்திலும் விளங்குபவர் ஒரே கடவுள் என்னுங் கொள்கையினராதலால், அவர்கள் எந்த மதத்தினர் கோயில்களுக்குஞ் சென்று, அங்கங்கே அவரவர் வணங்குந் தெய்வங்களையுந் தந் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகின்றனர். மகமது மதத்தினர் நாகூர்ப் பள்ளி வாசலில் வைத்து வணங்கும் மீரா சாயபு ஆ ண்டவர் கோயிலிற் சென்று வழிபடும் பெருந் தொகை யினரான கூட்டத்தாரிற் பெரும்பாலார் சைவ சமயத்திற் சேர்ந்தவரேயாவர். வேளான் கண்ணியில் உரோமன் கத்தோலிக் கிறித்துவர் வைத்து வணங்கும் மேரியம்மையை நேர்ந்து கொண்டு, அவ்வம்மையை வணங்கச் செல்லும் பெருந்தொகையினரான மக்களுஞ் சைவசமயத்திற் சேர்ந்தவ ரேயாவர். இங்ஙனமாகப் பண்டிருந்தே சைவ சமயிகள் ஏனைச் சமயத் தெய்வங்களையும் ம் வழிபடுந் தன்மைய ராயிருத்தலால், அவர்கள் எந்தச் சமயத்தையும் இகழ்வது மில்லை, எந்தச் சமயிகளையும் பகைப்பதுமில்லை, மற்றைச் சமயிகளைத் தமது சைவ சமயத்திற் புகுமாறு வற்புறுத்து வதுமில்லை. இவ்வியல்பினரான சைவ சமயிகளை இடைக் காலத்து வைணவர்கள் மிகுதியாய்ப் பகைத்துச் சிவபிரானை இகழ்ந்து கீழ்ப்படுத்துதற்குப் பொய்யான பல கட்டுக்கதை களையும் பொதுமக்களுக்குத் தெரியாத வடமொழியிற் புனைந்து வைத்து, அவைகளையெல்லாஞ் ‘சூதர்’ ‘வியாசர்’ முதலான முனிவர்களே இயற்றினார்களெ னவும் பொய்யுரை பகர்ந்தனர்.

அதுமட்டுமோ, ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னும் ஆழ்வார்கள் காலத்திலும் எல்லாஞ் சிவபிரானை வழிபடு வாருந் திருமாலை வழிபடுவாரும் வழிபாடு ஆற்றுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/173&oldid=1587280" இலிருந்து மீள்விக்கப்பட்டது