உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

139

ஒருவரேயாவர். இவற்றின் விரிவுகளை யாம் பெரிதாராய்ந் தெழுதிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலின் இரண்டாம் பகுதியிற் காண்க.

இனிச், சைவத்திற்கும் வைணவத்திற்கும் வேற்றுமையும் பகைமையும் அங்ஙனம் பிற்பட்ட ஆழ்வார்கள் காலத்தில் உண்டாவதற்குக் காரணமென்னென்றால், அதனையும் ஒரு சிறிது காட்டுதும். பண்டை நாளிற் சிவபிரான் பிறப்பு இறப்பு ல்லா முழுமுதற் கடவுளாக வைத்து வணங்கப்பட்டு வந்தாற்போலவே, திருமாலும் பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற்கடவுளாகவே வைத்து வணங்கப்பட்டு வந்தனர். அக்காலத்தில் அவர்கள் திருமால் என வைத்து வழிபட்ட தெய்வம் இறைவியாகிய பார்வதியேயல்லாமல் வேறு பிறர் அல்லர். இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னமே பாடப்பட்ட பரிபாடலிற் போந்த திருமால் வணக்கப் பாட்டொன்றில்,

"முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலிற்

பிறவாப் பிறப்பினை பிறப்பித்தோர் இலையே'

ஒரு சிறிதும்

என்று திருமால் பிறவாத கடவுள் என் என்று நுவலப்பட் டிருக்கின்றனர். மற்ற ஆழ்வார்கள் காலத்திலோ, நம் போற்றாய் வயிற்றினின்றும் பிறந்து உழன்று மாய்ந்த அரசர் களும் பிறருமாகிய கண்ணன், இராமன், வாமனன் முதலான மக்கள் திருமாலின் பிறப்புகளாக பிறப்புகளாக உயர்த்து வைத்து வைணவர்களால் வணங்கப்படுவாராயினர். கடவுளுக்குப் பிறப்பு இறப்புச் சொல்ல ஒருப்படாத வர்களும். மக்களாய்ப் பிறந்து மாண்டவர்களைத் தெய்வங் களாக வைத்து வணங்கக் கடுகளவும் இசையாதவர்களுமான சைவ சமயத்தவர்களோ பிற்காலத்து வைணவக் கொள்கைக்கு உடன்படாதவராய் அதனை மறுக்கவே, வைணவர் உண்மை யுணராமல் அவரை மிகுதியாய்ப் பகைக்கலாயினார். ஆனாற், சைவர்களோ மூலப்பொருளாகிய திருமாலைச் சிறிதும் இகழ்தலின்றி இன்றுகாறும் அவரை வழிபட்டே வரு கின்றனர். திருப்பதி, திருவரங்க முதலான திருமால் கோயில் கட்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தும் மக்களின் தொகையை ஊன்றிநோக்கினால், அவர்களில் முக்காற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/172&oldid=1587279" இலிருந்து மீள்விக்கப்பட்டது