உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

66

மறைமலையம் – 21

அரன் நாரணன் நாமம் ஆன்விடைபுள் ஊர்தி உரைநூல் மறை உறையுங்கோயில் - வரைநீர் கருமம் அழிப்பு அளிப்புக் கையதுவேல் நேமி உருவம் எரி கார்மேனி ஒன்று”

எனவும்

“பொன்திகழுமேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும் - என்றும்

இருவர் அங்கத்தால் திரிவரேனும் ஒருவன் ஒருவன் அங்கத் தென்றும் உளன்

எனவுஞ் சிவவுருவுந்திருமாலுருவும் ஓர் உருவாய் வைத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க. இங்ஙனமே பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந்திருவந்தாதியிலுந்,

66

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும்

சூழ்அரவும் பொன்நாணுந் தோன்றுமால் - சூழுந்

திரண்டருவி பாயுந்திருமலை மேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து”

என்று சிவபிரான் திருவுருவுந் திருமால் திருவுருவும் ஓர் உருவாய் வைத்துரைக்கப்பட்டிருத்தல் கண்டு கொள்க.

இவ்வாறு முதலாழ்வார் இருவர் காலம் வரையிற் சைவமும் வைணவமும் மிகவும் ஒற்றுமையான உயர்ந்த நிலையில் வைகிச் சிறந்து திகழாநிற்க, அவ்விருவர்க்குஞ் சிறிது காலம் பிற்பட்டுத் தோன்றிய பூதத்தாழ்வார் காலத்தில் அவ்விரண்டற்குள்ளுஞ் சிறிது வேற்றுமையும் பகைமையுந் தலைக்காட்டத் தொடங்கின. சிவபிரானை இகழ்ந்து கூறும் நான்குபாட்டுகள் பூதத்தாழ்வார் இயற்றிய அந்தாதியிற் காணப்படுகின்றன. இனிப் பூதத்தாழ்வார்க்குப் பின் வந்த ஆழ்வார்களிற் சிலர் சிவபிரானை ஓரோவிடங்களில் உயர்த்தியும் ஓரோவிடங்களில் தாழ்த்தியும், வேறு சிலர் இழித்தே பேசியும். மற்றுஞ்சிலர் சிவபிரானைப் பற்றி ஏதுமே கூறாதுவிட்டும் பாட்டுக்கள் பாடியிருக்கின்றனர். சிவபிரானை இகழ்ந்து பேசுவதில் முதல் நின்றவர் திருமழிசையாழ்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/171&oldid=1587278" இலிருந்து மீள்விக்கப்பட்டது