உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

6. வேத ஆகம விளக்கம்

னி, வேதங்களாவன, இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நான்காதலும், அவற்றுள் இருக்கு 21, எசுர் 101, சாமம் 1000, அதர்வணம் 9 சாகைகள் உடையவாதலும், அவை ‘அற்பசுருதிவாக்கியம்”, ‘பிரபலசுருதிவாக்கியம்' என இருதிறப் படுதலும், அவற்றுள் முன்னைய வேள்வியாற்றுதல் முதலான வினைகளையும், பின்னைய பதி பசு பாசஞானங்களையும் அறிவுறுப்பனவாதலும், வேதம் என்னுஞ்சொல் அறிதற் கருவி யெனப் பொருள் தருதலும். வேதப்பொருளை உணர்தற்குக் கருவியாவன சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி என ஆறாகுதலும், இவற்றின் விளக்கங்களும் காட்டப்படுகின்றன.

அதன்பின், சிவாகமங்கள் ‘காமிகம்' முதல் ‘வாதுளம் ஈறாக இருபத்தெட்டாதலும், இவை 'மந்திரம்”, “தந்திரம்’, சித்தாந்தம்' என முப்பகுதியவாதலும், இவையொவ் வொன்றுஞ் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற் பொருளைக் கூறுவனவாதலும், ஆகமம் என்னுஞ் சொற்பதிபசு பாச இயல்களை யுணர்த்துவதென்றேனும், உயிர்களுக்கு அறியாமை தீர்த்து மெய்யுணர்வு பிறப்பித்து வீடுபேற்றினை நல்குவிப்பதென்றேனும் பொருள் படுவதாதலும், இவ்விருபத் தெட்டாகமங்களின் வழித்தோன்றிய உபாகமங்கள்’ ‘விசுவகன்மம்' முதல் 207ஆதலும், இவையிற்றின் விரிவுகளும் நுவலப்படுகின்றன.

னிச், சிவாகமங்களின் சிறப்பும், பயனும், 'இரத்தினத் திரயம்', ஸ்காந்தம்', 'வாயுசங்கிதை' 'ஆலஸ்யமான்மியம்', அதர்வசிரசு’ ‘சூதசங்கிதை' ‘சங்கரசங்கிதை’ ‘சைவபுராணம் முதலான நூல் மேற்கோள் கொண்டு நிறுவப்படுகின்றன. சிவாகமங்கள் சுருக்கமான வேதவுரைகளுக்கு விரிந்த விருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/181&oldid=1587288" இலிருந்து மீள்விக்கப்பட்டது