உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

149

யுரை போல் விளங்கலானும், வேதங்களில் நுவலப்பட்ட காயத்திரி மந்திர உருவேற்றுமியல் "சரலிங்க ஸ்தாவர லிங்கங்கள்”. நிலைபெறுத்தி 'வழிபாடாற்று முறைகள் எரியோம்பும் வகைகள், திருக்கோயில் அமைக்கும் முறைகள் போல்வன பலவுஞ் சிவாகமங்களாலன்றி வேதங்களால் உணர்தல் இயலாமையானும், வேதப்பொருளை மெய்யாகத் தெளிந்து கோடற்குச் சிவாகமப் பயிற்சி இன்றியமையாது வேண்டற்பாலதாயிருத்தல் காண்க.

நீலகண்ட சிவாசாரியார் வேதாந்த சூத்திரத்திற்குத் தாம் வகுத்த பேருரையில் இறைவன்றன் முற்றறிவு இயற்கை யுணர்வு தன்வயத்தனாதல் முதலான ஆறு இயல்புகளையும், உயிர்கள் எய்துதற்குரிய முக்காலவுணர்ச்சி அணிமா முதலான பேறு அமைதி முதலான குணங்களையுஞ் சிவாகம மேற் கோள்கள்கொண்டே விளக்கியிருத்தலும், பாஸ்கராசாரியார் 'லலிதாஸஹஸ்ரநாமத்திற்குத் தாம் இயற்றிய விருத்திரை யுரையிலுஞ் சிவாகமவுரைகளை எடுத்துக்காட்டி அம்மை யின் பெயர்ப் பொருளை விளக்கியிருத்தலுஞ் சிவாகமங்கள் வேதத்தினும் பார்க்கச் சிறப்புப் பயனும் மிகுதியும் உடைய வாதல் தெளியப்படும். எனவே, சங்கராசாரியார் தமது வேதாந்த சூத்திரவுரையிற் சிவாகமங்களை இழித்துப் பேசியதும், அதனை வைணவரொருவர் தமக்குத் துணையாக எடுத்துக் காட்டியதும் பொருத்தமில் செயல்களா மென் றுணர்ந்து கொள்க.

இனிச், சங்கராசாரியார் சைவ சமயத்தை மறுத்தா ரெனக் கரைவாரது கூற்றைக் களைதற்கு நாயகரவர்கள், “நீலகண்ட விஜயத்”த்திலிருந்து ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக் காட்டுகின்றார்:

மாயாவாத வேதாந்தத்தைப் பரவச் செய்வாரான சங்கராசாரியார் ஒருகாற் சித்தாந்த ஆசிரியரான நீலகண்ட சிவாசாரியாரைக் காணாப்போயினர். கண்டு தாம் வேதாந்த சூத்திரத்திற்கு எழுதிய உரைப்பொருள்களை எடுத்துக் கூறிக் கொண்டே வந்தனர். அவைகளைக் கேட்ட நீலகண்டர் தாம் வேதாந்த சூத்திரத்திற்கு எழுதிய உரைப்பொருள்களையும் எடுத்துச் சொல்லித், தாம் உரைத்த வுரையே சூத்திரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/182&oldid=1587289" இலிருந்து மீள்விக்கப்பட்டது