உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

.

மறைமலையம் – 21

கருத்தை நேரே இனிது விளக்குதலுஞ் சங்கராசாரியார் இயற்றியவுரை சூத்திரப்பொருளை நேரே விளக்காமை யோடு அதன் கருத்துக்கு மாறாவன கூறுதலும் எடுத்துக் காட்டினர். அவ்வாறு நீலகண்டர் நிகழ்த்திய தடைகளுக்கு விடை டை சொல்லல் இயலாமல் வாய் அவிந்த சங்கரர் மனம் புழுங்கி நரசிங்க மூர்த்தியை அலறி அழைக்க, உடனே நரசிங்கர் அஞ்சத்தக்க கொடிய வடிவத்துடன் தோன்றி, நீலகண்டரைக் கொல்லுதற்குச் செல்லா நின்றனர். அது கண்ட நீலகண்டர், சரபப் பறவையின் உருவங்கொண்ட வீரபத்திரரை நினைந்து அழைத்து, அந்நினைவில் உறைத்து நிற்க, உடனே சரபப் பறவையானது தோன்றி அந்நரசிங்கத்தைத் தன் நகங்களால் இரு கூறாக்கிக் கொன்றது. அதனைக் கண்டு திகில் கொண்ட சங்கரர் தாஞ்செய்த பிழையினைப் பொறுக்கும் படி வேண்டி நீலகண்டர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். நீலகண்டர் அவரை மன்னித்து, அவர்க்குச் சிவதீக்கை செய்து, சிவபிரானைப் பாடுக என்று கட்டளையிடச் சங்கரர் 'சிவானந்தலகரி’, சௌந்தரியலகரி, 'சிவபுஜங்கம்' முதலான நூல்களை இயற்றிச் சிவபெருமானையும் அம்மையையும் உளங்குழைந்து வழுத்தியதுடன், அந்நூல்களில், திருஞான சம்பந்தப் பெருமான், கண்ணப்பர், சிறுத்தொண்டர், இயற்பகையார், சண்டேசுரர் முதலான சிவனடியார் செய்த சிவத்தொண்டின் அருமை பெருமைகளையும் வியந்தெடுத்துச் சொல்லினர்.

இங்ஙனமாகலின், சங்கரர் சைவ சித்தாந்தத்தை மறுத்தன ரென வைணவர் கூறும் உரை அடாதவுரையாமென்க.

ன்னும், மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகச் செந்தமிழ் மாமறையில்,

“பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையாற் பரம மியாம்பர மென்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்க மாடாமோ

என்றருளிச் செய்த திருப்பாட்டில் திருமாலை இகழ்ந்து பேசினாரென அவ்வைணவர் குறை கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/183&oldid=1587290" இலிருந்து மீள்விக்கப்பட்டது