உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

151

திருமால் சிவபிரான் திருவடியைத் தேடியலுத்த நிகழ்ச்சி பழைய வடநூல்களில் நுவலப்பட்டிருத்தலின், அதனையே மாணிக்கவாசகர் எடுத்துக் கூறினர். அது குறையாதல் யாங்ஙனம்? அவ்வைணவர் தமக்குத் துணையாய்க் கொண்ட சங்கராசாரியாரே “சிவானந்த லகரி"யில், திருமால் பன்றியுருவெடுத்துச் சிவபிரான்றிருவடியைத் தேடியலுத்த கதையைக் கூறியிருக்கின்றார். அதுவேயுமன்றித் திருமால் சிவபிரான் கையில் அம்பாகவும், அவர் ஏறும் எருதாகவும், அவர்க்கு வழிபாடு செய்யும் அர்ச்சகராகவும், அவர்க்கு மனைவியாகவும், அவர் அம்பலத்தில் திருக்கூத்தாடியபோது மத்தளம் அடிப்பவராகவும் பலவகையாற் றொண்டு செய்து பாராட்டிய பேரன்பின் றிறத்தை வியந்து பேசியிருக்கின்றார்.

இன்னும், அவர் தமது

சளந்தர்யலகரி'யில்,

“நான்முகன், திருமால், இந்திரன், இயமன், குபேரன் முதலான எண்டிசைக் காவலர் எல்லாம் அழிந்தொழிந்த காலத்தும், அம்மே, நின் காதலராகிய சிவபிரான் அழிவின்றி என்றும் உளராயிருக்கின்றனரல்லரோ,” எனக் கிளந்ததும் என்னை

மேலும், “பைபலாதம்' எல்லாப் பேறுகளும் பெறுதற் பொருட்டு உருத்திரப் பெருமானை வழிபடுதல் வேண்டு மென்பது நுவன்று, அங்ஙனம் அவரை வழிபட்டுத் தாம் விரும்பிய பேற்றினை அடைந்தாரில் திருமாலை முதற்கண் எடுத்துக் காட்டலுற்று, அவர் சிவபிரான் கையில் அம்பாக அமர்ந்து தொண்டு செய்ததனையும், தமது கண்ணைப் பிடுங்கிச் சிவபிரான் திருவடிகளில் அதனை மலராக இட்டு வணங்கி ஆழிப்படை பெற்றதனையும் பிறவற்றையும் நன் கெடுத்துக் கூறுதலால், சைவசமயாசிரியருஞ் சங்கராசிரி யரும் அவ்வுபநிடதப் பொருள்களையே தாமும் எடுத்துக் காட்டினாரன்றி, அவர் திருமாலை கழ்ந்தனராதல் செல்லுமோ?

66

இன்னுஞ், சங்கராசிரியர் சிவாகமங்களை சிவாகமங்களை இகழ்ந் தனரென்றலும் பொருந்தாது, என்னை? அவர் திருஞான சம்பந்தப் பிள்ளையாரை வழுத்துகின்றுழி, அம்மே, செந்தமிழ்க் குழவியாகிய திருஞானசம்பந்தரென்னும் முகில் நின்றிருமுலைப்பௌவத்திற்படிந்து அதன்கண் நிறைந்த ஞானவமிழ்தினைப் பருகித் தேவார ஆகமப்பொருள்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/184&oldid=1587291" இலிருந்து மீள்விக்கப்பட்டது