உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் – 21

பொழிந்ததன்றோ? என்று பாடினாராகலின், திருஞான சம்பந்தர் அருளிச் செய்த தேவார திருப்பதிகப் பொருளுஞ் சிவாகமஞானபாதப் பொருளும் ஒன்றேயாகையாற், சங்கரா

சிரியர் வ்விரண்டையும் பெரிது பாராட்டினவரென்

பதிற்றட்டுண்டோ?

இனிக், “காஞ்சிமான்மியம்” 24-ஆம் இயலிலுந் திருமால், திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களையோதிச் சிவவுருவினை எய்துமாறு சிவபிரானாற் கட்டளையிடப் பெற்ற வரலாறுங் கூறப்பட்டிருத்தல் காண்க. இனிச், சைவசமயத்தின் உட்பகுப்பிற் சேர்ந்த ‘பாசுபதம்' முதலிய மதங்களைச் சங்கராசிரியர் இழித்துப் பேசியதென்னென்றால், அவர் நீலகண்ட சிவாசாரியாரைக் கண்டு அவராற் சைவசமய மெய்ப்பொருளைத் தெளிந்து உறுதி கூடுதற்குமுன், தாஞ் செய்த வேதாந்த சூத்திரவுரையில் அங்ஙனஞ் செய்தாராகலின், அது கொள்ளற்பாலதன்று.

மேலுஞ், சங்கராசிரியர் சைவசமயத்தையுஞ், சிவாக மங்களையும் இகழ்ந்ததற்கு ஒரு காரணம், "நீலகண்ட விஜயத்”திற் சொல்லப்பட்டிருக்கின்றது. அதுவருமாறு, ஒரு காற் சங்கரர் தம்மாணாக்கர் குழுவுடன், காஞ்சி மாநகர்க்குச் சென்று, சிவபிரான்றிருக்கோயிலிற் புகுந்ததும், அங்கே ஆயிரக்கால் மண்டபத்தில் ஆதிசைவக்குருக்கள் பலர் சிவாகமம் ஓதிக்கொண்டிருத்தல் கண்டு அவரை அணுகினர். இவரைக் கண்டதுங் குருக் கண்மார் சிவாகமம் ஓதுதலை நிறுத்திவிட்டனர். அதன்மேற் சங்கரர் அவற்றை அவர்கள் ஓதும்படி வேண்ட, “நீர் சிவதீக்கை பெறாதவராகலின் நீர் கேட்கச் சிவாகமங்களை ஓதுதல் ஆகாது” என ஆதிசைவர் அதற்கிணங்காது மறுத்து விட்டனர். சங்கரர் அவர் கூறிய தன் உண்மையுணராமல் அவர்களொடு மாறுகொண்டு, ஆதிசைவர்களையுஞ் சிவாகமங்களையுஞ் சைவசமயத்தை யும் இழித்துப் பேசிவந்ததுடன், அக்காலத்திருந்த அரசர் களைத் தமக்குத் துணை கொண்டு, தமக்கு யன்ற இடங்களிலிருந்த சிவபிரான் திருக்கோயில்களில் வைதிகரை வழிபாடு செய்யுமாறும் ஏற்படுத்தினர், பின்னர்ச் சிறிது காலங்கழித்து நீலகண்ட சிவாசாரியாரைக் கண்டு வணங்கி, அவராற் சிவதீக்கை செய்யப் பெற்றுச், சைவ சமயமெய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/185&oldid=1587292" இலிருந்து மீள்விக்கப்பட்டது