உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

153

பொருள் உணர்ச்சி கைவரப் பெற்றாராய்த் திகழ்ந்தன ரென்பது.

இதற்குச் சான்றாகச், சங்கரர் தமது பிற்காலத்தில் இயற்றிய "பிரபஞ்ச சாரம்” என்னும் மாந்திரிக நூலிற் சிவ மந்திரங்களை உருவேற்றும் வகைகளுக்கெல்லாஞ் சிவாகமங் களிலிருந்தே மேற்கோள்கள் எடுத்துக் காட்டி நிறுவியிருப்பதும் நினைவிற் பதிக்கற்பாற்று.

ஆகவே, சைவமதங்களைச் சங்கரர் இகழ்ந்தது அவற்றின் உண்மையுணராத் தமது முற்பருவத்தேயாகலின், அதனை எடுத்துக்காட்டி வைணவர்கள் சைவசமயத்தை இகழ்ந்து தீவினைக்கு ஆளாகலாகாது, சிவபிரானிடத்துஞ் சிவாகமங் களிடத்தும், திருநீறு சிவமணி தாங்கும் அடியார்களிடத்தும் இறைவற்குப் படைத்த பண்டங்களிடத்தும் எவர் தீய வெண்ணங்கொள்கின்றனரோ அவர் கீழ்மக்களாவர் என்ற காந்தபுராணமுஞ், சிவபிரானையுஞ் சிவாகமங்களையும் எவன் இழித்துப் பேசுகின்றானோ அவனுக்கு

எவ்வகையான

கழுவாயும் (பிராயச்சித்தமும்) நூல்களிற் சொல்லப்படவில்லை என்று சிவதருமோத்தரமுங் கூறுதலை எல்லாரும் நினைவில் இருத்தக் கடவர். “அரனைப் பழித்துத் திரிபவரைப் பாராதே” என்றார் சந்தான குரவராகிய உமாபதி சிவாசாரியாரும்...

வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த அப்பையதீக்கிதர் சைவசமய ஏற்றமுஞ் சிவபிரானே முழுமுதற் கடவுளாதலும் நன்குணர்ந்தன்றே சைவவொழுக்கம் மேற்கொண்டு ஒழுக லாயினார். சிவாகமச் சான்றோராகிய அகோர சிவாசாரியார். அப்பையரின் சைவநடையை வியந்தன்றே அவர்க்குச் சிவதீக்கை செய்து அவரைச் சிவவழிபாடு செய்யப் பணித்துத் தம் மாணாக்கருள் ஒருவராக அவரைச் சேர்த்துக் கொண்டனர். நீலகண்டபாடியாமே வேதாந்த சூத்திரக் கருத்தறிந்த உரையாதல் கண்டு, தம்மாசிரியர் இட்ட கட்டளைப்படி, ட அப்பைய தீக்கிதர் அப்பாடியத்திற்குச் “சிவார்க்கமணி தீபிகை: என்னும் ஓர் உரை வகுக்கலாயின ரென்பதனாலும், அங்ஙனமே “பிரமவித்யாத்வரர்” முதலான முன்னாசிரியர்களும் அப் பாடியத்திற்குத் “தர்ப்பணம்” ‘தாராவளி’ சீகண்ட பாஷ்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/186&oldid=1587293" இலிருந்து மீள்விக்கப்பட்டது