உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

7. திருமங்கையாழ்வார் திருஞானசம்பந்தர் காலத்தவர் அல்லர்

இனி, வைணவரிற் சிலர் சிறிதும் ஆராய்ச்சியுணர் வின்றித், திருமங்கையாழ்வார் திருஞானசம்பந்தரை எதிர்ப் பட்டு அவர் கையிலிருந்த வேலைப்பிடுங்கி விட்டார் எனுங் குருட்டுக் கதையொன்றைச் சொல்லி, அவ்வாற்றாற் சைவத் திற்கு ஓர் இழிவுந் ர் இழிவுந் தமது வைணவத்திற்கோர் உயர்வுங் கற்பித்து விடப் பார்க்கின்றார். இது சிறிதும் பொருந்தாது.

திருஞானசம்பந்தர்

சிறு

தாம் மூன்றாண்டுள்ள பிள்ளையாயிருந்த ஞான்றே உமை அம்மை பொன்வள்ளத் தேந்திய அருண்முலைப்பால் பருகி, எல்லா நூற்பொருள் களும் ஓதாது ஒருங்குணர்ந்த ஞானாசிரியராய், இறைவன் அளித்த பொற்றாளங்கையில் ஏந்தித், திருப்பதிகங்கள் பாடி யருளிய வண்ணமாய்ச் சிவபிரான் றிருக்கோயில் கடோறுஞ் சென்று, அம்மையப்பரை வணங்கி வந்தனரென்று, “நம்பி யாண்டார் நம்பி திருவந்தாதி” “பெரியபுராணம்”, “காஞ்சி மாந்மியம்', சீகாழிமாந்மியம்', 'ஆலாசியமாந்மியம்', ‘உப மந்யுபக்தவிலாசம்’, ‘அகஸ்தியபக்த விலாசம்', 'சௌந்தரிய லகரி”, ‘சிவரகசியம்’, முதலான சிறந்த நூல்கள் உரைப்பக் காண்டுமன்றி, அவர் கையில் வேல் ஒன்று உளதென்று அவற்றுள் எந்தநூலும் உரைப்பக் காண்கிலேம். அங்ஙன மாகவும் அவர் கையில் வேல் ஒன்று இருந்ததென்றும், அதனைத் திருமங்கை மன்னன் பிடுங்கிக்கொண்டன னென்றும் வைணவர் கட்டிவிட்ட கதைக்கு ஏதொறு சான்றுங் காணாமையின் அதுவெறும்பொய்க் கதையேயாதல் திண்ணம். திருமங்கை மன்னன் திருஞானசம்பந்தர் காலத்தவன் அல்லனென்பதே உண்மையென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/188&oldid=1587295" இலிருந்து மீள்விக்கப்பட்டது