உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் – 21

காண்

என்று நாயகவரர்கள் மேலே ஆராய்ந்து காட்டியபடி, திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தர்க்கு முந்நூறு ஆண்டு பிற்பட்டுக் கி.பி.பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தே இருந்த வராகலின், அவர் திருஞான சம்பந்தர் காலத்தவ ரல்லரென்பதனைப் பல மெய்ச்சான்றுகள் டாராய்ந்து, மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும் என்னும் எமது பெருநூலில் விளக்கிக் காட்டியிருக்கின்றேம். திரு ஞானசம்பந்தர் காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதிக் கண்ணதாகுமென்பதனைக் கல்வெட்டாசிரியர்களும், பிறரும் நன்காராய்ந்து நிறுவியிருக்கின்றனர். திருவாளர் சுந்தரம் பிள்ளையவர்கள் ஆங்கிலத்திற் பெரிதாராய்ந்தெழுதிய ய திருஞானசம்பந்தர் காலம் (The Age of Thirujnanasambandha) என்னும் நூலில் இம்முடிபைக் கண்டு கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/189&oldid=1587296" இலிருந்து மீள்விக்கப்பட்டது