உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

8. வைணவர் கட்டிய வேறு சில பொய்க் கதைகள்

இனி, அறிவாளிகள் கண்டு நகைத்து அருவருக்கத் தக்க வேறு சில பொய்க்கதைகளையுங் கற்பித்து, அவ்வாற்றாற் சைவசமயத்தை இழிவுபடுத்த முயன்ற வைணவரின் தகாச் செயல்கள் சிலவற்றை நாயகரவர்கள் எடுத்துக் காட்டி மறுத்திருக்கின்றனர். அவை வருமாறு.

66

ம்

அவற்றுள் வைணவ ஆழ்வார்கள், சிவவாக்கியர் என்னுஞ் சிவஞான முனிவரைத் திருத்தி வைணவராக்கினர் எனக் கட்டிய கதை ஒன்று; இதற்கு ஏதேனும் ஒரு சான்றுண்டா? சிறிதுமே இல்லை. சிவவென்னும் மூலமந்திரத்தை எந்நேரமுஞ் சொல்லிக் கொண்டிருந்த காரணம் பற்றியே சிவவாக்கியர் சிவவாக்கியர்” என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றார். இ முனிவர், பார்ப்பனரின் பொருள் அற்ற புல்லிய வினைகளையும், அவர் தஞ் சாதிச் செருக்கையும் அவர் செய்து போதருஞ் சிறு தெய்வ வணக்கத்தையும் பலவகையாலும் மறுத்து, எல்லாம் வல்ல சிவத்தை வழிபட்டு, உய்யும் உண்மை ஞானத்தையே வலியுறுத்திப் பல தண்டமிழ்ப் பாடல்களைப் பாடியிருக் கின்றார். அவற்றுள் ஒன்று இது,

“குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கடோறும் மூழ்குவீர் மண்டுகங்கள் போல நீர் மனத்து மாசு அறுக்கிலீர் மண்டையேந்து கையரை மனத்திருத்த வல்லிரேற் பண்டைமால் அயன்றொழப் பணிந்து வாழலாகுமே'

இதனையொத்த பல உண்மை ஞானப் பாடல்களைப் பாடிச் சிவவழிபாட்டின் ஏற்றத்தை எடுத்தியம்பி வந்த சிவவாக்கியரைப் பிறந்து இறந்து உழன்ற கண்ணனையும் இராமனையும் பாடிய ஆழ்வார்கள் திருத்தினரென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/190&oldid=1587297" இலிருந்து மீள்விக்கப்பட்டது