உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் - 21

அறிஞரால் எள்ளி நடையாடற் பாலதாயிருக்கின்றதன்றோ? சிவவாக்கியர் தம் வாழ்நாள் முழுதுஞ் சிவஞானச் செல்வராய் விளங்கினமையாலன்றோ தாயுமான சுவாமி களும்.

66

‘கண்டது பொய் என்று அகண்டா கார சிவம் மெய்யெனவே விண்ட சிவவாக்கியர் தாள் மேவுநாள் எந்நாளோ"

என்று தமதருமைத் திருப்பாட்டில் அவரைச் சிறந்தெடுத்துப் ாட்டினர். இதனாற் சிவவாக்கியர் உண்மைச் சிவஞான முனிவராதலும், அவர் தாயுமான சுவாமிகள் காலத்திற்கு முன்னிருந்தவராதலும் நன்கு பெறப்படுதல் காண்க. மற்றுச் சிவவாக்கியர் வைணவ ஆழ்வார்கள் காலத்து இருந்தனர் என்பதற் காதல், அவர் ஆழ்வார்களாற்றிருத்தப்பட்டு வைணவ மதத்தைத் தழீ இயினார் என்பதற் காதல் வைணவர்கள் ஏதொரு சான்றுங் காட்டாமல், காட்டாமல், தாமாகவே கட்டிச் சொல்லும் பொய்க்கதையை ஆராய்ச்சி வல்ல அறிஞர் ஒரு பொருட்டாகக் கொள்ளா ரென்பது.

இனி, மேற்காட்டிய கட்டுக் கதையினும் பார்க்க நகையாடி இழிக்கத் தக்க மற்றொரு பொய்க் கதையினை வைணவர் புனைந்திருக்கின்றனர். அதாவது, ஓர் ஆழ்வார் தமது காலிலிருந்த கண்ணாற், சிவபிரானது நெற்றிக் கண்ணைப் பழுதுபடுத்தி அவரை வென்றனராம். எல்லார்க்கும் முகத்திலே தான் கண்ணிருக்கக் காண்கின்றோம். மற்று இல்வாழ்வார்க்கோ காலிலே கண்ணாம், ஈது எத்துணைப் படுபொய்! எல்லா உலகங்களையும் இயங்கியற் பொருள் நிலையியற் பொருள் களையும் நெற்றிக் கட்பொறியொன்றினாற் சுட்டுச் சாம்பராக்க வல்லவன் என்று பைபலாத உபநிடதத்தில் வழுத்தியுரைக்கப் பட்ட பிறப்பு இறப்பு இல்லா எல்லாம் வல்ல சிவத்தின் நெற்றிக் கண்ணைக், கடவுள் இலக்கணமே இன்னதென்றறியாமற் பிறந்திறந்து எய்த்த மக்களைக் கடவுளாக வணங்கிப் பாடிய ஓர் ஆழ்வார் பழுதுபடுத்தி வென்றனரெனக் கரைந்தது எத்துணை இறுமாப்பும் பேதைமையுமாயிருக்கின்றது!

இன்னும், இங்ஙனமே ஓர் ஆழ்வார் பாண்டியன், அவைக் களத்தே சென்று அவன் அங்கே தூக்கியிருந்த பொற்கிழியை அறுத்துத், திருமாலையே முழுமுதற் கடவுள் என்று நாட்டின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/191&oldid=1587298" இலிருந்து மீள்விக்கப்பட்டது