உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

159

ரெனவும், இன்னும் ஓராழ்வார் தாம் பாடிய பாடல்களைக் காண்டு மதுரையில் வீற்றிருந்த சங்கப் புலவர்களை வென்றன ரெனவும் வைணவர்கள் பொருந்தாப் பொய்க் கதைகள் கட் ை கட்டி விட்டிருக்கின்றனர். இக்கதைகளுக்கு ஒரு சிறு சான்று தானும் நூல்களிலாவது கல்வெட்டுகளிலாவது காணப் படாமை யினாலும்;

வைணவர்கள் பாண்டியன் அவையில் திருமாலையே முழுமுதற் கடவுளென நாட்டியது மெய்யாயின் பாண்டிய மன்னன் வைணவ மதத்தைத் தழுவி மதுரை யிலுள்ள சிவபிரான் கோயிலைத் திருமால் கோயிலாக மாற்றி யிருப்பானாகலானும்; ஆழ்வார்கள் காலத்திற்கு முன்னும் பின்னும் இன்றும் மதுரையிலுள்ளது. சிவபிரான் கோயிலே யாதல் நூல்களாலுங் கல்வெட்டுகளாலும், நன்கு விளங்கு தலாலும், சங்கத்தவர்களை வெல்லத் தகுந்த செந்தமிழ்ச் சுவையும் முழுமுதற்கடவுள் நம்பிக்கையும் ஆழ்வார்கள் பாடல்களிற் காணப் படாமையோடு அவை அவ்விரு வகையிலுஞ் சங்கத்தார் மெய்யே கிளந்து பாடிய செந்தமிழ்ச் செய்யுட்களுக்கு இறப்பத் தாழ்ந்த நிலையின வாயுமிருத்தல் தெற்றென விளங்கலானும் வைணவர் கட்டிய இக்கதைகள் முழுப் பொய்யேயாதல் துணியப்படும்.

மேலுஞ், சங்கத்தார் காலத்திலெல்லாந் திருமால் வணக்கஞ் சைவ சமயத்தின் உள்ளடங்கியேயிருந்தது. சங்க காலத்து நூல்களிலெல்லாஞ் சிவபிரானுக்கே முதன்மை சொல்லப்பட்டிருக்கின்றது. "ஏற்று வலனுயரிய எரிமருள் அவிர்சடை, மாற்றாருங்கணிச்சி மணிமிடற்றோனும்' என்னும் புறநானூற்றுச் செய்யுளையும், "தொடங்கற் கட்டோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின்” என்னுங் கலித்தொகைச் செய்யுளையும் உற்று நோக்குக. சங்கத்தார் காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் மணிமேகலை என்னுஞ் செந்தமிழ்ப் பெருங்காப்பியங்களிலுஞ் சிவப்பிரான் முதன்மையே சொல்லப்பட்டிருத்தல் காண்க.

வைணவஞ் சைவத்தினின்று வேறாய்ப் பிரிந்ததும், வைணவத்திற்கென்று தனிநூல்களுந் தனியாழ்வார்களுந் தோன்றியதுஞ் சைவ சமயாசிரியர் காலத்திற்குப் பின்னரே யாம், அதாவது கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்தேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/192&oldid=1587299" இலிருந்து மீள்விக்கப்பட்டது