உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

❖ 21❖ மறைமலையம் – 21

இவ்வெட்டாம் நூற்றாண்டு முதற்றோன்றிய ஆழ்வார்கள், கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முன்னிருந்த சங்கத்தார்களை வென்றாரென்பது, “யான் என்முப்பாட்டன் திருமணத்திற் பந்தற்காலைப் பிடித்துக் கொண்டு நின்றேன்” என்னும் ஒரு சிறுவனின் பொய்யுரையினும் பார்க்கப் படுபொய் நிறைந்த தாயிருக்கின்றது! இன்னும் வைணவ ஆழ்வார்களின் கால நிலையுஞ், சைவ சமயத்தின் பண்டை மாட்சியும் மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் மிக விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன.

குலோத்துங்க சோழ

மய்

இனிச், சிவனடியாராகிய வேந்தனைக் கூரத்தாழ்வார் வென்றுவிட்டதாக வைணவர்கள் ஒருபொய்யுரை கூறிவருகின்றனர். ஆனால், உண்மையாக நடந்தது வருமாறு: குலோத்துங்க சோழ வேந்தன் ஒட்டக் கூத்தர் பாற்றமிழ்க் கல்வி பயின்று அதிற் பெரும்புலமை வாய்ந்து திகழ்ந்ததுடன், சைவசித்தாந்தப் பொருள்களையும் தென்மொழி வடமொழிகளில் நன்காராய்ந்து அவற்றின் முடிவு கண்டவன். அவ்வேந்தன் காலத்திருந்த இராமாநுசர் என்பவர், வடமொழி தென்மொழிகளில் முன்னாசிரியர் அனைவருஞ் சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுளென ஆராய்ந்து தெளித்து வைத்த மெய்ந்நூல்களின் மெய் வழக்கிற்கு முற்றும் மாறாகத், திருமாலையே முழுமுதற் கடவு ளென நாட்டுதற்கு விழைந்து, வேதங்கள் உபநிடதங்கள், திகாசங்கள் புராணங்களிற் போந்த சொற்கள் சொற் றாடர்கள் கதை நிகழ்ச்சிகள் முதலானவைகளை யெல்லாந் தாம் விரும்பியபடி திரிபு படுத்திச், சிவபிரான் மேலனவாயிருந்தவைகளுக்கெல்லாந் திருமால் மேலன வாகப் பொருள் செய்து பொய்யான கொள்கைகளை இத்தமிழ்நாடெங்கணும் பரப்பி வரலாயினர். இது தெரிந்த குலோத்துங்க சோழன் “சிவபிரானுக்கு மேலதாய் ஏதுமில்லை என்னும் ஒரு சொற்றொடரை எங்குமெழுதிப் பரப்பி, அதற்கு மாறாகப் பேசுவார்எவராயினும் அவரைப் புலவர்பேரவையில் வருவித்து, அவரொடு நடுவுநிலை பிறழாது வழக்கிட்டு, அவர் அவ்வழக்கிற்றோல்வியடைந்த பின், அங்ஙனம் தோல்வி யுற்றார் பாற் “சிவத்துக்கு மேல் ஏதுமில்லை” என்று எழுதி வாங்கி வந்தான். இவ்வாறு குலோத்துங்கவேந்தன் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/193&oldid=1587300" இலிருந்து மீள்விக்கப்பட்டது