உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

161

வருதலை நன்கறிந்தும், இராமாநுசர் அம்மன்னனுடன் நேரே சென்று வழக்கிட்டால் தமது கொள்கைவெற்றிபெறாதெனக் கண்டு, அவன் பாற்செல்லாமலே மறைவாய்த் தமது கொள்கையைப் பரவச் செய்து வந்தனர். இது கண்ட மன்னர்பிரான், இராமாநுசருடன் நேரே வழக்கிட்டு அவரது கொள்கையின் பொய்ம்மையை உலகிற்கு வெளிப்படுத்தி உதவிபுரிதல் வேண்டித், தன் வேவுகாரரை அவர் பால் விடுத்தனர். அரசன் தம்மை அழைத்தற்கு வேவுகாரரை விடுத்திருத்தலை, முன்னதாகத் தம் மாணவர் வாயிலாகத் தரிந்ததும், இராமாநுசர் தாம் பூண்டிருந்த காவியுடை யினைக் கழற்றி விட்டு, வெள்ளாடையுடுத்து வேறுநாடு சென்று விட்டனர்.

தம் மாணவர்

அது தெரிந்த கூரத்தாழ்வார் இராமாநுசரைப் போல் உடை முதலியன பூண்டு, பெரிய நம்பியென்பவரைத் தம்மைப்போல் உடை அணியச் செய்து, தமக்குரிய வைணவர் கூட்டத்துடன், குலோத்துங்க சோழன் அவைக்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும், அரசன், திருமால் முழுமுதற் கடவுள் அல்லாமையுஞ் சிவபிரானே முழுமுதற்கடவுளாதலுந் தெற்றெனப் பிரிந்து விளங்க அரதத்தாசாரியார் இருப்புப் படியேறி உறுதிப்படுத்திச் சொல்லிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி அவைகளை மறுக்கும்படி, உடையவர் கோலத்தில் நின்ற கூரத்தாழ்வாரையுங், கூரத்தாழ்வார் கோலத்தில், நின்ற பெரிய நம்பியையுங் கேட்க, அவ்விருவரும் அவற்றிற்கு விடை கூற மாட் டாராய்க் கலங்கி நின்றனர். அது கண்ட அரசன், “சிவத்துக்கு மேல் ஏதும் இல்லை” என்று எழுதித் தரும்படி அவர்களைக் கேட்க, அவர்கள் குறும்பாய்ச் “சிவத்துக்கு மேற்பதக்கு என்று எழுதித்தந்தனர். “சிவம்” என்னுஞ் சொல்லுக்குக் குறுணி என்னும் ஓர் அளவுப்பொருளும் உண்டாகலின், அதற்கு அரசனுங் கற்றார் அனைவருங் கொண்ட முழுமுதற் கடவுள் என்னும் பொருளை ஏளனஞ் செய்தொழித்து, அச்சொல்லுக்கு அருகி எங்கோ கொள்ளப்படுங் குறுணியென்னும் பொருளை வினையமாய்க் கொண்டு, “சிவத்துக்கு மேற்பதக்கு" என்று அவர்கள் இகழ்ச்சியாய் எழுதித் தந்ததைப் பார்த்து அரசன் பெருஞ்சினம் மூண்டவனாய்த் தன் ஏவலர்களை அழைத்துச் “சிவத்தைப் பழித்த இவர்களைக் கொலை செய்தலே தக்கது”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/194&oldid=1587301" இலிருந்து மீள்விக்கப்பட்டது