உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் – 21

அவர்களைக் கொண்டு போய் வெட்டி விடுக!" என்று கட்டளை இட் ட்டனன். அது கேட்டு நடுநடுங்கிய கூரத்தாழ்வார் “அரசனே, யான் இராமாநுசர் அல்லேன். இவருங் கூரத்தார் அல்லர். எங்கள் குருவான இராமாநுசர் தங்களுடன் வழக்கிடுதற்கு அஞ்சி எங்கோ போய்விட்டனர். அவரது மானத்தைக் காக்க யாங்கள் இங்ஙனம் வந்தோம். எங்களைக் காப்பாற்றும்” என்று இரந்து கேட்க, அரசன் சினந் தணிந்து, “இவர்களைக் கொல்ல வேண்டாம். ஆனாலும், ஆனாலும், முறையாக முறையாக வழக்குப் பேசித் தமது கொள்கையை நாட்டமாட்டாத இவர்கள் தமது தோல்வியினை ஒப்புக் கொண்டு சிவத்தை வணங்காமல், அதனை முறை வழுவி இகழ்ந்து பெருந்தவறு இழைத் தமையால், இவர்களை வேறு ஒரு வகையிலாவது ஒறுத்தலே தக்கது. ஆகவே, இவர்களை ஒரு காட்டிலே கொண்டு போய்க் கண்களைப் பிடுங்கிவிட்டு விடுக என்று மீண்டுங் கட்டளைத் தந்தனனெனவும், அவ்வாறே அவர்கள் கண் பிடுங்கப்பட்டதிற் பெரியநம்பி உயிர்மாளக் கூரத்தார் மட்டும் உயிர் பிழைத்திருந்தனரெனவுங் "குலோத்துங்க சோழ விஜயம்" கூறாநிற்கின்றது. வைணவர் எழுதிவைத்த "குருபரம்பராப் பிர பாவம்” என்னும் நூலும் பெரும்பாலும் அதனோடொத்தே தனை நூவல்கின்றது.

இனிச் சோழநாடு கடந்து மறைந்தொழுகிய இராமாநுசர் குலோத்துங்கவேந்தன் காலமானபின், மீண்டுந் தென்னாடு போந்து, கீழ்மக்களாகிய ஒட்டர் உப்பரவர் முதலியோரையும் வடமாள் சிலரையுந் தமது வைணவமதத்தைக் கைப்பற்றும் படிசெய்து, இதற்குமுன் இந்துமக்கள் எவராலும் அணியப் படாததும் வடமொழி தென்மொழி நூல்களில் எங்குஞ் சொல்லப்படாததுமான பட்டைநாமத்தைப் புதிதாக அவர்தம் நெற்றிகளிற் பரக்கச்சாத்தித், தமது கொள்கையைப் பரவச்செய்துவந்தனர். அதுவேயுமன்றித், தமது புதிய வைணவக் கொள்கைக்கு மேற்கோளாக ஒரு நூல்செய்வான் புகுந்து, வட மொழிக்கண் உள்ள வேதாந்தசூத்திரத்திற்கு நீலகண்ட சிவாசாரியார் இயற்றியருளிய நீலகண்டபாடியத்தைப் பலகாலும் பயின்று, அதனோடொப்ப 'விசிட்டாத்து விதபாடியம்' என்னும் பெயரால் ஓர் உரைநூலும் வரைந்து வைத்தனர். இதனால், இராமாநுசர் சைவ சமயக் கொள்கை களையே ஆங்காங்கு மாற்றித் தமது விருப்பம்போல் ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/195&oldid=1587302" இலிருந்து மீள்விக்கப்பட்டது