உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

163

உரைநூல் இயற்றினரன்றி, இவராதல், வேறே ஆழ்வார்களாதல் சைவசமயத்தவரை வென்றனரென்பது வெறும் புளுகேயா

மென்க.

இன்னும், வைணவசமய முன்னோர் பலர், சிவனடியார் சிலருடன் வழக்கிட்டுத் தோல்வியுற்ற வரலாறுகள் சிலவற்றை நாயகரவர்கள் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றனர்:

கஞ்சனூரில் மதுசூதனாசாரி எனப்பெயரிய வைணவர் ஒருவர்,சிவபிரானைப் பழித்தலையே ஒரு ஒரு தொழிலாக் காண்டு, மாந்தர்பலரைப் பொய்ந்நெறியிற் புகுத்தி வந்தனர். அத்தன்மையினார்க்குப் பிறந்த தவப்புதல்வன் ஒருவன் கல்வியில் வல்லனாய் வளர்ந்து வடநூல் தென்னூல்களைப் பழுதற ஓதியுணர்ந்து தெளிந்தபின், தன் தந்தையின் வைணவக் கொள்கையை மறுத்து, வைணவக்குறிகளை டானாய்த் திருநீறுஞ் சிவமணியும் அணிந்து, தன்னை அரனுக்கு ஒப்படைத்துவிட்டகாரணத்தால் ‘அரதத்தன்' எனப்பெயர் பூண்டு, சிவனடியார் குழுவிற் சேர்ந்து சைவசமய உண்மையை எங்கும் பரவச் செய்துவந்தனன். அதுகண்ட அவ்விளைஞரின் தந்தையான மது சூதனாசாரி அக்காலத் திருந்த அரசனிடஞ் சென்று, தன் புதல்வன் தனக்குமாறாய் ஒழுகுதலைக் கூறி முறையிட, அவ்வரசன் அரதத்தரைத் தனது அவைக்கு வருவித்து, அவர்தங் கொள்கையை ஒவ்வொன்றாச் சொல்லி நாட்டும்படி கேட்ப, அவரும் நெருப்பிட்டுப் பழுக்கக் காய்ச்சிய இருப்புப்படிகள் ஒவ்வொன்றன்மேல் ஏறியிருந்து தம்முடைய சைவ உண்மைகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லிவர, அவர்தந் தந்தையும் அவருடன்போந்த வைணவக்குருமாரும் அவ் வுண்மைகளை மறுக்கமாட்டாமல் தோல்வியுற்றனர். அங்ஙனம் அரதத்தர் நாட்டிய சிவபிரான் முழுமுதன்மைகளிற் சில வருமாறு.

இருக்குவேத மூன்றாம்மண்டிலத்தில் உள்ளதும், அந்தணர்களாற் காலை நண்பகல் மாலை என்னும் முப்போதும் ஓதப்படுவதுமான காயத்திரி மந்திர உறையுளிற் ‘பர்க்கன்’ என்னும் பெயரால் வழுத்தப்படும் முழுமுதற் கடவுள் சிவபிரானேயென்பது மைத்திராயணி யுபநிடதத்தினாலும், அமர நிகண்டினாலுந் துணியப்படும் உண்மையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/196&oldid=1587303" இலிருந்து மீள்விக்கப்பட்டது