உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

9. சிவபிரானே முழுமுதற் கடவுள்

சிவபிரான் வழிபாட்டிற் சிறந்தவனான இராவணனைக் கான்ற பாவம் நீங்கும்பொருட்டு, இராமன் சிவலிங்கத்தை அமைத்து வழிபட்ட காரணத்தால் ‘இராமேசுரம்' எனப் பயரிய திருக்கோயில் அன்றிருந்து இன்றுகாறும் இத் தென்றமிழ்நாட்டில் நிலவுதல் இமயம் வரையிலுள்ள மக்கள் அனைவரும் அறிந்த தொரு வாய்மையன்றோ?

கண்ணன் கயிலைமலையை நண்ணிச் சிவபிரானை நோக்கித் தவம்புரிந்து தனக்குப் பிள்ளைப் பேறுண்டாகும்படி வேண்ட, அங்ஙனமே சிவபிரான் அவற்கு அருள்செய்ததை அறியாதார் யார்?

திருமால் தன்னால் வெல்லப்படாத அரக்கரை அழிக்குங் கருவியாக ஆழிப்படை (சக்கராயுதம்) ஒன்றனைப் பெறுவான் வேண்டிச் சிவபிரானை நாடோறும் ஆயிரந் தாமரைமலர் தூவி வழிபாடாற்றிவருகையில், ஒருநாள் ஆயிரம் பூக்களில் ஒருபூக்குறைய, உடனே அதற்கு ஈடாகத் தாமரையிதழ்போன்ற தன் கண்களில் ஒன்றைப் பிடுங்கி அதனைச் சிவபிரான் திருவடிகளில் இட்டு ட்டு வணங்கச் சிவபிரான் திருமாலின் மனவுறைப்புக்கு மகிழ்ந்து அவர்க்கு அவர் வேண்டிய ஆழிப்படையினை நல்கினரென்பதும் நூல்களால் அறியக் கிடக்கின்றதன்றோ?

L

சிவபிரான் சனகர் முதலான முனிவர்க்கு வாய்வாளாத் தவநிலையினை அறிவிக்கும்பொருட்டு, உமைப்பிராட்டி யாரைப் பிரிந்து தவநிலையில் அமர, உலகத்துள்ள எல்லாவுயிர்களும் ஆண் பெண் சேர்க்கையின்றி முயற்சியவிந்து கிடத்தலால் உலகியல் நடைபெறாமை கண்டு, தேவர்கள் திருமால்மகனான காமவேளை இறைவன்பால் விடுத்தாராகக், காமவேளும் இறைவனை அணுகி அவற்குக் காமவிருப்பினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/197&oldid=1587304" இலிருந்து மீள்விக்கப்பட்டது