உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

165

எழுப்ப முயலவே, இறைவன் நெற்றிக் கண்ணால் அவனை வெகுண்டு நோக்கக் காமவேள் வெந்து சாம்பராயினதூஉம் அறியாதார் யார்?

தேவர்கள் தாம் அரக்கரோடு

இடும்போரிற் சாவாதிருத்தல் வேண்டித் திருமாலின் துணைகொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து அமிழ்தம் எடுக்க முயல்கையில், அதன்கண் முதலில் எழுந்து பெருகிய நஞ்சின் தாக்குதலால் திருமாலும் மற்றைத் தேவர்களும் உடல்கரிந்து ஓடிச் சிவபிரானை அடைக்கலமாய்ப் புகப், பிரான் அந் நஞ்சினைத் தான் பருகித் தேவர்களைக் காத்த அருட்பெருஞ் செயலும் இருக்குவேதத்திலேயே ஓதப்பட்டிருக்கின்றதன்றோ?

தன்னை ஓவாது வணங்கி வழுத்துதலையே தவமாய்க் கொண்ட மார்க்கண்டேய ருயிரைக் கொள்ளைகொள்ளவந்த கூற்றுவனைக் காலால் உதைத்துக் கீழ்வீழ்த்தி, இளைஞரான அம் மார்க்கண்டேயரை என்றும் இளைஞராயிருக்கப் பணித்த சிவபிரான்றன் அருட்பெருஞ்செயல் எவர்தாம் அறியாதவர்?

சிவபிரான் முப்புரங்களை நெற்றிக்கண்ணால் எரித்துத் தேவர்களைக் காத்த அரும்பெருஞ் செயலும் இருக்கு வேதத்திலேயே நன்கெடுத்து நுவலப்பட்டிருக்கின்றதன்றோ?

சிவபிரானைப் பழித்துத் தக்கன்வேட்ட வேள்வியானது, சிவபிரான் ஏவிய வீரபத்திரரால், அழிக்கப்பட்டதுடன், தக்கனுந் தலைவெட்டுண்டு இறந்துபட, அவனுக்குத் துணைநின்ற விஷ்ணு பிரமன் முதலான தேவர்களும் அவரால் ஒறுக்கப்பட்ட செய்தி ‘தைத்திரீய சங்கிதை’, ‘சதபதபிராமணம்', 'இராமாயணம்’, ‘மாபாரதம்”, 'காந்தம்', முதலான நூல் களிலெல்லாம் மிகப் பழைய காலந்தொட்டு ஓதப்பட்டு வருகின்றதன்றோ?

படைக்கலங்களைக்

காண்டு

தனது கையிலுள்ள பகைவரை வேறல் இயலாதெனக் கண்ட அருச்சுனன், கண்ணன் அறிவுறுத்தியபடி சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரியச் சிவபிரான் அவனது தவத்திற்கு உவந்து பாசுபதப்படை அவனுக்கு வழங்க, அவன் அதனாற் பகைவரை வென்ற செய்திமா பாரதத்தில் விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/198&oldid=1587305" இலிருந்து மீள்விக்கப்பட்டது