உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

தன்றோ?

மறைமலையம் – 21

இரணியனைப்பிடித்துப் பிளந்து அவனது செங்குருதி யினைப் பருகிய நரசிங்கன், அதனால் வெறிகொண்டு உலகத்தையே அழித்துவிடுதற்கு ஆரவாரஞ் செய்தல்கண்ட தேவர்கள் வெருக்கொண்டு சிவபெருமானை வழுத்த, அவரது ஆணையால் வீரபத்திரர் ஒரு சரபப்புள்ளின் வடிவில் வந்து அந் நரசிங்கனைப் பிடித்துக் கிழித்த செய்தி 'சரபோப நிடதத்திற்’ கூறப்பட்டிருக்கின்றதன்றோ?

தாருகவனத்து முனிவர்கள், வேள்விவேட்டலே எல்லா நலனும் அளிக்கவல்லது, சிவபிரானை வணங்குதல் வேண்டாச் செயலேயாம் என்று பகர்ந்து இறுமாந்தொழுகியகாலையிற், சிவபிரான் ஓர் ஆண்டியாகவும் அவரது ஏவலால் திருமால் அழகிற் சிறந்த ஒரு மோகினிப் பெண்ணாகவும் போந்து அம் முனிவரின் இறுமாப்பைக் குலைத்தபின், சிவபிரான் அம் மோகினிப் பெண்ணைக்கூடிச் 'சாத்தன்' எனப் பெயரிய 'ஐயனாரை’ ஈன்ற வரலாறு வரலாறு இவ்விந்தியநாடு ழுமுதும்

அறிந்ததொன்றன்றோ?

66

திருமாலும் நான்முகனுந் தாந்தாமே பெரியரென வழக்கிட்டுப் போர்புரியுங்கால் அவ்விருவரின் நடுவே சிவபிரான் தழற்பிழம்பு வடிவாய்த் தோன்றி, எமது முடியையாதல் அடியையாதல் எவர் தேடிக் கண்டு பிடிக்கின்றனரோ அவரே பெரியர்' எனக் கூறியருளத், திருமால் பன்றிவடிவெடுத்து அவ்வழற்பிழம்பின் அடியையும், நான் முகன் ஓர் அன்னப்புள்ளின் வடிவெடுத்து அதன் முடியையுங் காணப்புக்குப் பன்னெடுங்காலம் முயன்றும், இருவரும் அவை தம்மைக் காணமுடியாமல் அலுத்துத் தருக்கு அடங்கிய வரலாறு பழைய நூல்களிலும் உலகவழக்கிலும் பண்டு தொட்டு வழங்கி வருகின்றதன்றோ?

திருமால், நான்முகன், இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பிறந்தார்கள் இறந்தார்கள் என்னுங் கதை அவரவர் பெருமை கூறும் புராணங்களிலேயே வெளிப்படை யாய்ச் சொல்லப்பட்டிருக்கச், சிவபிரான் பிறந்தார் இறந்தார் என்னுங் கதை குறிப்பாலேனும் எந்த நூலினும் நுவலப்படாமை யின், சிவபிரான் ஒருவரே பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/199&oldid=1587306" இலிருந்து மீள்விக்கப்பட்டது