உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

167

கடவுளாதலுந், திருமால் முதலான ஏனையோரெல்லாம் பிறந்திறக்குஞ் சிற்றுயிர்களேயாதலும் உள்ளங்கை நெல்லிக்கனி போற் றெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?

உயர

காசியின்கட் கங்கைக்கரையிலே நின்று வியாசன் அறிவு மயங்கித் தன் L மாணாக்கரெதிரே தன் கைகளை வெடுத்துத் திருமாலே முழுமுதற் கடவுள் என ஆணை யிட்டுரைப்ப, உடனே வியாசனுடைய கைகள் மரத்துப்போய் மடக்க இயலாமல் நின்று நோவினை விளைவியா நிற்கவே, திருமால் அவன்பாற்போந்து, "அறிவற்ற மடையனாகிய வியாசனே! யான் உலகிற்குத் தலைவன், எனக்குத் தலைவன் சிவபெருமானேயாவன் என்றறிந்து அவனையே வழிபடக் கடவாய்” என்றறிவுறுத்திய வரலாறு பழைய நூல்களிற் சொல்லப்பட்டதொன்றன்றோ?

முப்புரங்களைச் சிவபிரான் எரித்தகாலையில் திருமால் ஓர் எருதின் வடிவெடுத்து இறைவனைத் தாங்கிய செய்தியும் பண்டை நூல்கள் மொழிந்ததேயன்றோ?

இங்ஙனமாகச், சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுளாம் உண்மைகளை அரதத்தர் ஒவ்வொன்றாகச் சொல்லிவர, அவர் தந்தையாகிய மதுசூதனாசாரியும் அவருடன் அரசவையிற் போந்து குழுமிய வைணவரும் அவை தம்மை ஒருசிறிதும் மறுக்கமாட்டாமல் வாய்அவிந்து அவரை வணங்க, அரதத்தர் அவரெல்லாரையுந் திருத்திச் சிவதீக்கை செய்து மெய்வழிப்படுத்தினர். இவ்வரலாறு அப்பையதீக்கிதர் இயற்றிய “ஹரதத்தமாந்மியம்” என்னும் நூலில் விரிவாகச்

சொல்லப்பட்டிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/200&oldid=1587307" இலிருந்து மீள்விக்கப்பட்டது