உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

10. சைவாசிரியரால் தோல்வியுற்ற

வைணவர்கள்

இன்னும் ங்ஙனமே சிவபெருமானைப் பழித்துத் திருமாலையே முழுமுதற் கடவுளாக்க விழைந்த வைணவக் குருமார் மற்றுஞ் சிலருஞ் சைவாசிரியரால் வெல்லப்பட்ட வரலாறுகளை நாயகரவர்கள் எடுத்துக்காட்டியிருக் கின்றார்கள். அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் து மிக விரியுமாகலின் அவற்றை இங்கே சுருக்கிக் காட்டுவாம்.

காஞ்சிமா நகரிலிருந்த தாத்தாசாரி’ என்னும் வைணவகுரு தங்காலத்திருந்த அப்பையதீக்கிதர் என்னுஞ் சைவாசிரியரைத் தாம் எந்தவகையிலும் வெல்ல முடியாமை கண்டு, மனம் பெரிது புழுங்கி, நஞ்சங் கலந்தபாலை அவர் பருகுமாறு கொடுக்க, அவர் 'சிவதத்வவிவேகம்' என்னும் நூலை யியற்றிச் சிவபெருமானை வழுத்தி அதனைப் பருக அந்நஞ்சு அவரைக் கொல்லமாட்டாதாயிற்று. அதன்பின் தாதாசாரி தங்காலத்திருந்த அரசனதவைக் களத்தில் அவரை வருவித்து வைத்து, வியாசபட்டர், பராசரபட்டர் என்னும் மத்துவ மதகுருமார்களை நடுநின்று தீர்ப்புச் சொல்பவராக நிறுவி, அப்பையதீக்கிதருடன் பலநாள் வழக்காடியுங் கடைசியில் தோல்வியுற்றார். நடுவர் இருவரில் வியாசபட்டர் எழுந்து, அப்பையதீக்கிதரால் வைணவமதத்தின் பொய்ம்மை புலப்படுத்தப்பட்ட வகைகளை எடுத்து மொழிந்து தீக்கிதருக்கு மாணவராய்ச் சைவசமயந்தழீஇயினார். அதுகண்டு பராசர பட்டர் வயிறெரிந்து தாமே தீக்கிதருடன் ஏழுநாள் வரையில் வழக்கிட்டு முடிவில் தாமுந் தோல்வியுற்றுத் தீக்கிதரை வணங்கிச் சைவராயினர். அதன்பின் பௌத்தகுரு ஒருவரும் அவருடன் வழக்கிட்டு டு வாய்அவிந்தனர். அதன்பின் மாயாவாதிகளாகிய சுமார்த்தர் சிலர் சிவாகமங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/201&oldid=1587308" இலிருந்து மீள்விக்கப்பட்டது