உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

169

கழ்ந்துபேச, அவர்களை மறுத்து 'வைதிகா சாரநிர்ணயம்’ என்னும் நூலொன்றை யியற்றி அவர்கட்கு அறிவு தெருட்டினர். இங்ஙனம், மத்வராமாநுஜ பௌத்த மாயவாத மதங்களை மறுத்துத் துகளாக்கியது போலவே, சைவசமயத்திற்கு மாறான ஏனை எல்லா மதங்களையும் பொடிபடுத்தி அப்பையதீக்கிதர் ‘பரமத திமிர பாநு' என்னும் நூலொன்றியற்றினர்.

இவ்வாறு

எந்தவகையிலுந் தொலைக்கமுடியாத சைவசமய கோளரியாய்த் தீக்கிதர் வீறி விளங்குதல்கண் தாத்தாசாரி கொலைகாரர் சிலரை ஏவித், தீக்கிதர் ஆற்றில் நீராடித் தனியே வரும் நேரம் பார்த்து அவரைக் கொல்லுதற்கு முயலத், தீக்கிதரைச் சூழச் சூலம் ஏந்திய கையினராய்ச் சிலர் நிற்கக்கண்டு, அக்கொலைஞர் பெரிதும் வெருக்கொண்டு, தம்மைத் தாத்தாசாரி ஏவியதனைத் தீக்கிதருக்குத் தெரிவித்து, அவரைப் பணிந்தேகினர். உடனே தீக்கிதர், நடுநிலைவழீஇச் சிவனடியார்க்குத் தீங்கிழைக்குந் தாத்தாசாரி டொழிகவெனச் சிவபிரானைவேண்டி வசவு கூறத், தலையில் இடிவிழுந்து தாத்தாசாரி மாண்டனரெனச் சிவஞான சுவாமிகள் இயற்றிய “தீக்ஷிதமாந்மியம்" என்னும் நூல் நுவல்கின்றது.

மாண்

இன்னுந், தஞ்சைமாநகரிற் சிவாக்கிரயோகிகள் என்னுஞ் சைவப்பெரியார் ஒருவர் சைவசமயவுண்மைகளை எங்கும் விளங்கச் செய்து கொண்டு வருங்காலத்தில், 'மணவாள மாமுனி' என்னும் வைணவகுரு ஒருவர், அந் நகரில் அரசு செலுத்திவந்த சரபோஜி மன்னர்பாற்சென்று, 'யாம் சிவாக்கிரயோகியுடன் வழக்கிட்டுச் சைவத்தைப் பொய்யாக்கல் வேண்டும்; அதற்கு நீர் ஓர் அவை கூட்டல்வேண்டும்' என்று வற்புறுத்த, அது தக்கதன்றென்று அரசன் மறுத்துரைத்தும், அவர் கேளாமையின், சிவாக்கிரயோகிகளின் உடம்பாடு பெற்றுச் சரபோஜி மன்னன் தனதரண்மனையிலேயே ஒரு பேரவை கூட்டுவித்து, 'எவர் தோல்வியடைகின்றனரோ அவர் வெற்றிபெற்றவரின் மதத்தைச் சார்தல்வேண்டு' மென ஆணை தந்தனன். சமயவழக்கானது பதினெட்டுநாள் மட்டும் நடைபெறல் வேண்டுமென்பதும் அறிஞரால் வரையறுக்கப் பட்டது. அதன்பிற் சிவாக்கிரயோகிகட்கும் மணவாள் மாமுனிக்குஞ் சமயவழக்கு நடந்து வருகையில் ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/202&oldid=1587309" இலிருந்து மீள்விக்கப்பட்டது