உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் – 21

நாளுஞ் சிவாக்கிரயோகிகள் பக்கமே வெற்றியுண்டாகி வரலாயிற்று; கடை சியாகப் பதினேழாம் நாளிலுஞ் சிவாக்கிரயோகிகள் வெற்றிபெற்று விளங்க, அரசனும் அரசவையிலுள்ள அறிஞர் பலரும் அதுகண்டு மிக மகிழ்ந்த வுள்ளத்தினாரா யிருத்தலுணர்ந்து, மணவாளமாமுனியும் அவர்தம் வைணவக் கூட்டத்தினருந் திகிலடைந்து, 'நாளைப் பதினெட்டாம்நாள் வழக்கு நடக்குமுன்னமே யோகியாரைத் தொலைத்துவிடல் வேண்டு'மென்று தமக்குள் உறுதிசெய்து, அன்றிரவே சிவாக்கிரயோகிகள் இருந்த திருமடத்தைத் தீவைத்துக் கொளுத்திவிட்டனர். மறுநாள் அதனையறிந்த அரசன் பதைபதைத்துச் சென்று திருமடத்தை நோக்கத் திருமடம் முற்றும் எரிந்து சாம்பராய்க் கிடக்க, அதன்கண் வேகாத ஓர் அறையில் மட்டுஞ் சிவாக்கிரயோகிகள் பழுது ஏதுமின்றித் தவத்தில் அமர்ந்திருக்கக் கண்டு மகிழ்ந்து, அவரை வணங்கினன். பின்னர் அரசன் தேர்ந்து பார்த்துத் திருமடத்தை நெருப்பிட்டுக் கொளுத்தினவர்கள் மணவாளமாமுனியும் அவரைச் சேர்ந்தவர்களுமே என்பதனை நன்கறிந்து, அவர் களெல்லாரையும் ஓர் அறையிற் புகுத்தித் தீவைத்துக் கொளுத்தி விட்டனனெனச் 'சிவாக்கிரயோகிகள் மாந்மியம்' புகலா நிற்கின்றது. இச்சிவாக்கிரர் 'சிவஞானபோதம்' 'சிவஞான சித்தியார்' என்னும் அறிவுநூல்கட்குச் சிறந்த உரைகளும் வேறுசில நூல்களும் இயற்றியிருக்கின்றனர்.

பெரியார்

ஒருவர்

தாம்

இன்னுங், கொப்பூரிலேயிருந்த பிப்பபாச்சையர் என்னும் சிவனடியார்களை அமுது செய்வித்தபின் எஞ்சிய உணவுப்பண்டங்களை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு தமது திருமடத்தை நோக்கிச் செல்லுகையில், தெருவின் ருபுறத்துமுள்ள வீடுகளின் திண்ணைகண் மேலிருந்த சுமார்த்த வைணவப் பார்ப்பனர்கள், 'எங்கள் அக்கிரகாரத்தின்வழியே இவ்வெச்சிற் பொருள்களைக் காண்டுசெல்லல் ஆகாது' என வழிமறிக்கப் பிப்பபாச்சையர் தம்முடைய கைகளால் அவ் வண்டிகளிலிருந்த பண்டங்களை வாரியெடுத்து, அப் பார்ப்பனர்களின் இல்லங்களின் மேல் வீசியெறிய, அவ் வில்லங்களெல்லாந் தீப்பற்றி யெரிந்தன. அதுகண்ட அப் பார்ப்பனர்கள் பெரிதும் அஞ்சி அவரை வணங்கி உயிர்பிழைத்தனரெனச் ‘சைவபுராணங்’

நிற்கின்றது.

கூறா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/203&oldid=1587310" இலிருந்து மீள்விக்கப்பட்டது