உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

L

171

இன்னுங், காசிமாநகரில் மஞ்சிதேவர் என்னுஞ் சைவப்பெரியார் ஒருவர் சைவவுண்மைகளை எடுத்து மக்களுக்கு விளக்கி வருதல்கண்டு மனம்புழுங்கிய வைணவர் சிலர் அவரைத் தம்முடன் வழக்காடும்படி அழைக்க, அவர் 'யான் நுங்களுடன் வழக்காடுவதினும், நுங்கள் பெருமாளே கோயிலினின்றும் எழுந்தருளி வந்து எங்கள் விசுவநாதப் பெருமாளை வணங்கும்படி செய்வேன்' என்று மொழிந்து, அங்ஙனமே அங்குள்ளதொரு திருமால் கோயிலினுட் சென்று திருமாலின் றிருவுருவத்தை அழைக்க, அத்திருவுருவந் தருவிலுள்ளார் அனைவருங் கண்டு வியப்புறத் தெருவழியே நடந்துசென்று காசிப்பிரான் றிருவுருவின்முன் வீழ்ந்து வணங்கிற்றென அச் சைவபுராணமே' மீண்டும் நுவலா நிற்கின்றது.

இன்னுந், 'திக்விஜயம் எம்பா வையங்கார்' என்னும் வைணவர் ஒருவர் ஒருவர் ‘அதர்வசிகா விலாசம்’ என்றொரு நூலெழுதிச் சைவத்தைப் புறம்பழிக்க, அதற்கு மறுப்பாக ‘அதர்வசிகா விலாச நிரசனம்' எனப் பெயரிய ஓர் அரியநூலை மைசூர் வீரபத்திரா ராத்யர் என்னுஞ் சிவனடியார் எழுதி வெளியிட்டனர். அதைக் கண்டவுடன் ஐயங்கார் மனம் வெந்து ஆராத்யர்பாற் போந்து வழக்காட, அவ் வழக்கிலுந் தோல்வி யுறவே, ஐயங்கார் மெய்யறிவு விளங்கி, ஆராத்யர்க்கு அடிமை யாகிச் சைவரான வரலாறு சங்கர பட்டர் இயற்றிய ‘சகலவேத ர் சிகாமணி' என்னும் நூலில் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றது.

இன்னும், 'இந்திரத்தூய்மன்” என்னும் வைணவ னாருவன், சிவனடியாரான அகத்திய முனிவரைப் பழித்த காரணத்தால் அவராற் காட்டானையாகும்படி வசைகூறப் பட்டுக் காட்டானையாகித் துன்புற்றமை பாகவதநூலிற்

சொல்லப்பட்டிருக்கின்றது.

இன்னும், பிரகலாதன் தன்றந்தை இரணியனுக்குப்பின் அரசு செலுத்தி வருங்கால், அவனது அவைக்குச் சிவனடியார் ஒருவர் போதத், தான் திருமாலடியவன் என்னுஞ் செருக்கால், அவரை வரவேலாது குறைவுபடுத்தவே, அவர் வருந்தி, 'மாயவனடியான் என்னுஞ் செருக்கால் நீ எம்மைத் தாழ்வு படுத்தினமையின், நீயும் அம் மாயவனுந் தீராப் பகைவராகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/204&oldid=1587311" இலிருந்து மீள்விக்கப்பட்டது