உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் – 21

கடவீர்கள்' என வசைகூறிச் சென்றனர். அங்ஙனமே, பிரகலாதன் சிலநாளில் மனந் திரிபெய்தி, “என் தந்தையைக் கொன்ற மாயவனை நான் வணங்குவதென்ன பேதைமை! இப்போதே நான் மாயவனை எதிர்த்துப் பழிக்குப்பழி வாங்குவேன்!” எனக் கூறித் திருப்பாற் கடலை அணுகித், தன்னொடு போர்செய்ய வரும்படி திருமாலை அழைக்க, அவர் வியப்புற்று, 'இவன் சிவனடியார்க்குப் பிழைசெய்த காரணத்தால் இங்ஙனம் மனந் திரிபெய்த லானான்; ஆகலின், இவனை அறிவு புகட்டிப் போகவிடுதலே தக்கது' எனக் கருதி, அவனொடு நெடுநாட் போர் இயற்றி, அவனைப் புறங் கண்டோடச் செய்தனரெனக் 'கூர்மபுராணங்' கூறாநிற்கின்றது. அதன்பிற், பிரகலாதன், மாயவனிடம் அன்புபாராட்டு தலொழிந்து, காசிமாநகர் சென்று சிவலிங்கம் வைத்து வழிபாடியற்றி உய்ந்தனனெனக் 'காசி கண்டம்’ உரையா நிற்கின்றது.

L

இன்னும், வைணவர் 'பெரிய திருவடி' எனப் பாராட்டி வணங்குங் கருடன் ஒருகால் மிகவுஞ் செருக்குற்று நந்திதேவர் முன்னிலையிற் செல்ல, அவர் தமது மூச்சினைக் கடுவிசையுடன் செலுத்தி அவனைத் துரும்புபோல் முன்னும் பின்னுமாய் அலைத்து அவனுடைய சிறகுகள் முறிந்துபோகும்படிசெய்து அவனது செருக்கினை அடக்கிய வரலாறும்; 'சிறிய திருவடி’ என வைணவராற் கொண்டாடப்படும் அநுமானை, இராமர் தாம் இராவணனைக் கொன்ற கொலைப்பாவந் தீர்தற் பொருட்டுச் சிவலிங்க வழிபாடு செய்தல்வேண்டிச் சிவலிங்கம் ஒன்று கொணரும்படி ஏவ, அவன் நந்திதேவரது உடம்பாடு பெறாமலே இறுமாப்புடன் திருக்கைலாய மலைக்குச் செல்ல, அதுகண்டு அவர் வெகுண்டு அவனை உதைக்க அவன் கீழ்விழுந்து இரத்தங் கக்கிய வரலாறும் 'ஸ்காந்தம்', 'வேதாசலமாந்மியம்', 'காளிகா கண்டம்' முதலான நூல்களில் நன்கெடுத்து நுவலப்பட்டிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/205&oldid=1587312" இலிருந்து மீள்விக்கப்பட்டது