உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

11. திருமாலுஞ் சிவனடியாரால்

ஒறுக்கப்பட்டமை

இங்ஙனமாகச் செருக்குற்று மயங்கிச் சிவனடியாரையுஞ் சிவபிரானையும் புறம்பழித்த வைணவர்கள் அச் சிவனடி யாரால் ஒறுக்கப்பட்டுச் செருக்கொழிந்தவாறு போலவே, திருமாலுஞ் சிவனடியாரைப் பகைத்து அவர்க்குத் தீங் கிழைக்கப் புக்ககாலையில் அவரால் ஒறுக்கப்பட்டு அறிவு திருந்திய வரலாறுகள் சிலவும் நாயகரவர்களால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன; அவை வருமாறு:

‘சுபதேவன்' எனப் பெயரிய வைணவ மன்னன் ஒருவன் சிவபிரான்றன் அடியவரான ‘ததீசி’ முனிவர்மேற் பகை கொண்டு அவரைக் கொல்வான் வேண்டி மாயவனை நோக்கித் தவம்புரிந்தனன். அவனது தவத்திற்கு உவந்த திருமால் அவனெதிர் தோன்றி, அவன் வேண்டியவாறே ததீசி முனிவரை அழிக்கும் பொருட்டுத் தமது ஆழிப்படையினை ஏவ, அஃது அம் முனிவர் பெருமானுக்கு ஊறுசெய்யமாட்டாதாய்க் கூர்மழுங்கி அவரை வலஞ்செய்து போயது. அது கண்ட மாயவன் ரிதுஞ் சீற்றங் சீற்றங்கொண்டு தனது வில்லிற் றொடுத்துப் பல்லாயிரங் கொடுங்கணைகளைச் செலுத்த, அவற்றைக் கண்டு புன்னகை கொண்ட அம்முனிவர் தருப்பைப் புல் ஒன்றை எடுத்து அவற்றெதிர் எறிய, அஃது அத்தனை அம்புகளையும் விழுங்கி விட்டது. அதன்மேல், மாயவன் பேருருக்கொண்டு எண்ணிறந்த மாயவர்களாகி அம் முனிவரைச் சூழ்ந்துகொள்ள, அது கண்டு அவர் தமது திருவடியொன்றைத் தூக்கி அதன் பெருவிரலை அசைத்தலும், அதன் கணிருந்து எண்ணிறந்த மாயவர்கள் சங்கும் ஆழியுங் கதையும் வாளும் வில்லும் பிடித்தவர்களாகி வெளிவர அதுகண்ட மாயவன் மிக வெருக்கொண்டு அம் முனிவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/206&oldid=1587313" இலிருந்து மீள்விக்கப்பட்டது