உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் – 21

பிரானை வணங்கி யுய்ந்த வரலாறு 'பாத்மபூர்வத்’ திலும், 'ஸ்காந்தத்’திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. இனி, அகத்திய முனிவர் திருக்குற்றாலத்திற்கு எழுந்தருளிய ஞான்று, அங்கிருந்த திருமால் கோயில் வைணவர்கள் அவரை யிகழ்ந்து தருக்கினமை கண்டு, அவர் அக் கோயிலினுட் சென்று கருவறையிலிருந்த திருமாலுரு வினைச் சிவலிங்க வுருவாகத் திரிபு படுத்திய செய்தி 'குற்றால மாந்மியம்’, ‘ஸ்காந்தம்' முதலான நூல்களிற் காணப்படுகின்றது.

ன்னுஞ், ‘சங்கு வர்ணர்' என்பவரொடு தொடுத்த பெரும் போரில் மாயவன் தன் தலைமயிர் அறுப்புண்டு மானம் அழிந்த செய்தி 'ஸ்காந்தத்'திலும், 'சங்கர தாசையர்' என்னுஞ் வனடியாரொருவர், காசிமாநகரிலிருந்த வைணவரின் காடுமை தாங்கமாட்டாமல் அவர்க்குரியதாயிருந்த திருமால் கோயிலை நெற்றிக் கண்ணால் எரித்து விட்டனரென்றும், எரிந்து பாழாய்க் கிடக்கும் அக் கோயில் ‘சூந்யாலயம்’ என இஞ்ஞான்றும் வழங்கப்பட்டு வருகின்றதென்றும் போந்த செய்தி ‘சைவபுராணத்’திலுங் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/207&oldid=1587314" இலிருந்து மீள்விக்கப்பட்டது