உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

12. சிவன் சிவனடியார்பால்

திருமால் அருள் பெற்றமை

இனித், திருமாலின் சிறந்த பிறவிகளாகக் கொள்ளப்படும் ராமனுங் கண்ணனுமாகிய கண்ணனுமாகிய இருவரில், இராமன் தன் காதன்மனையாளான சீதையை இழந்து கானகங்கடோறும் அவளைத் தேடி அலைந்துகொண்டு செல்கையில், அகத்திய முனிவரின் இருக்கையினை அடைந்து அவரை வணங்கித், தனக்கு நேர்ந்த இடுக்கணை எடுத்தியம்பிக் கண்ணீர் உகுத்துத், தான் உற்ற குறையினைத் தீர்த்து அருள்செய்யும்படி வேண்ட, அம் முனிவர் பிரான் இராமனுக்கு இரங்கி அவற்கு ‘விரஜாதீக்ஷை செய்து, சிவலிங்க வழிபாடுபுரியும்படி அறிவுறுத்தினராக, இராமனும் அங்ஙனமே சிவலிங்க வழிபாட்டினை மெய்யன் புடன் ஆற்றி வந்தனனென்றும், சிவபிரான் அதற்கு உவந்து அவன் முற்றோன்றி அவற்குப் பாசுபதம் முதலான சிறந்த படைக்கலங்களுஞ் சீதையை மீண்டும் பெறும் வரமும் வழங்கினரென்றும் 'பாத்மோத்தரமும்', 'வான்மீகி ராமாயண மும்' புகலா நிற்கின்றன.

பின்னர், இராமன் இராவணனைக் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு அயோத்திமாநகர்க்குப் போம்வழியிற் கோதவரியாற்றங்கரைக் கண்ணதான ‘பஞ்சவடி' என்னும் ஆலந்தோப்பினிடம் வந்து சேர்ந்தபோது, இராமன் சீதையை நோக்கி, "இவ்விடத்தில் முன்னே மகாதேவரான சிவபெருமான் எனக்கு அருள்செய்தார்” என்னும் பொருள்பட “அத்ர பூர்வம் மஹாதேவம்” எனக் கூறியதாக 'வான்மீகி ராமாயணம் இயம்பா நிற்கின்றது. இச் சொற்றொடர்க்கு வைணவர் பொருந்தாப் பொருள் கூறுவான் புகுந்து, மகாதேவன் ஆன வருணன் தனக்கு அருள்செய்ததனையே இராமன் குறிப்பித் தான் எனக் கரைந்தனர். வேதங்கள் உபநிடதங்கள் புராணங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/208&oldid=1587315" இலிருந்து மீள்விக்கப்பட்டது