உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

❖ - 21❖ மறைமலையம் – 21

இதிகாசங்கள் முதலான எவ்விடங்களிலும் 'மகாதேவன் என்னும் பெயர் காரண இடுகுறியாய்ச் சிவபிரான் மேற்றாகவே வருதலானும், இராமன் அகத்தியராற் சிவதீக்கை செய்யப் பெற்றுச் சிவலிங்க வழிபாடு செய்த பின்னரே சிவபெருமான் இராமன் முற்றோன்றிப் படைக்கலங்களும் வரமும் நல்கின ரென்று ‘பாத்மோத்தரம்’ நன்கெடுத்து மொழிதலானும் அவர் அதற்கு வயிறெரிந்து ஏற்றும் புன்பொருள் பொருந்தாப் பொருளேயாதல் திண்ணமாமென்க.

இனிக், கண்ணனுக்கு உபமந்யு முனிவர் சிவதீக்கை செய்து, சிவலிங்க வழிபாடு செய்யக் கற்பித்தபடியே அவன் வழிபாடு செய்து தான் வேண்டிய பேறுகளையெல்லாம் பெற்றானென்று 'சைவபுராணம்’,‘மகாபாரதம்’, ‘கூர்மபுராணம்’ முதலான நூல்கள் நன்கெடுத்து நுவல்கின்றன.

இனித், திருமால் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை ஓதிச், சிவபிரான்றிருவுருவத் தோடொத்ததோர் உருவினைப் பெற்றமை மேலெடுத்துக் காட்டப்பட்டது.

இன்னுந், திருவஞ்சைக் க களத்திற் சுந்திரமூர்த்தி நாயனாரைத் திருமால் நான்முகன் முதலான தேவர்கள் தெய்வயானையுடன் எதிர்கொண்டுவந்து திருக்கைலாயத்திற்கு அழைத்துச்சென்றமை,

“இந்திரன்மால் பிரமன் னெழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை யருள்புரிந்து அந்தர மாமுனிவர் இவன்ஆர்என வெம்பெருமான்

நந்தம் ஆரூரன்என்றான் நொடித்தான்மலை யுத்தமனே.”

எனச் சுந்திரமூர்த்திகளே அருளிச் செய்திருக்குமாற்றால் நன்கு புலனாம். இவ்வாறாகத் திருமாலும் அவர்தம் பிறவிகளான இராமனுங் கண்ணனும், எல்லாம்வல்ல சிவபெருமானையும் அவன்றன் அடியார்களையும் வழிபட்டுப் பேறுகள் பலவும் பெற்று உய்ந்தமை, பழைய விழுப்பெரு நூல்களால் நன்கு தெளியக் கிடப்பவும், அவற்றுக்கெல்லாம் முழுமாறாக வைணவர்கள் பொருந்தாக் கோள்கூறித், தனித் தலைமைப் பருங்கடவுளுக்குப் பிழைசெய்தல், அவர் தமது பிறவிப் பயனை இழப்பதாமன்றி மற்றென்னை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/209&oldid=1587316" இலிருந்து மீள்விக்கப்பட்டது