உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

13. யாகபதி சிவபிரானே யாவன்

66

சியாக

இனி, ஏகோஹீ ருத்ரோநத்விதீ யாயதஸ்துர்ய: மாந்லோகாந் ஈசதே (சுவேதாசுவதரோப நிடதம் 3..2) என்னும் வேதாந்தச் சொற்றொடரானது "இவ்வுலகங்களை யெல்லாந் தன்னாற்றலால் இயக்கும் இறைவனான உருத்திரன் ருவனே யுளன்; அவனுக்கு வேறாக இரண்டாம் இறைவன் ஒருவன் இலன் லன்' எனத் எனத் தெளிபொருள் தந்து உருத்திரனே முழுமுதற் கடவுள், அவனுக்கு வேறாகப் பிறிதொரு கடவுள் இ இல்லை என்று வலியுறுத்திக் கூறா நிற்பவும், வைணவர் சிலர் அதனொடு முரணி, வேள்விக் க களத்தே எல்லாத் தேவர்களுக்கும் அவியுணவு கொடுத்தபின், கடை அதனைப் பெறுதற்குரியான் எவனுளன் என வேள்வியாசிரியன் வினாயதற்கு உருத்திரனைத் தவிர வேறெவரும் இலர் எனப் பிறர்கூறிய விடையினை அச் சொற்றொடர் உணர்த்துவதாக ஒரு பெரும் பொய்யுரையினைப் புனைந்துகட்டிச் சொல்லினர்; இங்ஙனஞ் சொல்லுமிடத்து, யாகபதியாகிய விஷ்ணுவுக்கு அவியுணவை முதலில் அளித்து, அதற்குப் பின் நான்முகன் இந்திரன் முதலான மற்றைத் தேவர்கட்கெல்லாம் அதனை அளித்து, அவரெல்லாரினுந் தாழ்ந்த உருத்திரனுக்கு அதனைக் கடைப்படியாக அளித்தமையினையே அச் சொற்றொடர் குறிப்பித்தலால் உருத்திரனான சிவபிரான் எல்லாத் தேவர் களிலுங் கடைப்பட்டவனாவன் என அவ் வைணவர் புகன்றனர்.

ச்

இனி, அவர் அச் சொற்றொடர்க்கு அவ்வாறு பொருள் செய்து சிவபெருமானைக் கடைப்பட்ட தேவராக்குதற்கு, அச் சொற்றொடரும் அதனையுடைய சுவேதாசுவதர உபநிடதமுஞ் சிறிதாயினும் இடந்தருமாவென ஆராயற்பாற்று. அச் சாற்றொடர் சுவேதா சுவதரோப நிடதத்தின் மூன்றாம் இயலின் இரண்டாம் மந்திரத்தின்கட் போந்ததாகும். இம் மூன்றாம் இயலோ இறைவனைப் பற்றிய மெய்யுணர்வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/210&oldid=1587317" இலிருந்து மீள்விக்கப்பட்டது