உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

179

எனக் கூறுவாருரை எல்லாம்வல்ல இறைவனது வரம்பிலாற்ற லுக்கு மாறாய்ப் பொய்ப்படு மென்றும், இங்ஙனம் முத்தொழில்களையும் ஒருங்கே புரியும் முதல்வன் ஈசன், உருத்திரன் என்னுஞ் சிறப்புப் பெயர்களால் வழங்கப்படுவன் என்றும், அம் முதல்வன் எங்கும் நிறைந்த ஒளி வடிவினனாய் எல்லா உயிர்களின் கண்களுக்கும் என்றும் புலனாய் விளங்கிக்கொண்டிருப்பவன் என்றும் மிக வற்புறுத்தித் தெருட்டா நிற்கின்றன. வடமொழியுணர்ந்தார்க்கெல்லாம் மேலை உபநிடத மந்திரப்பொருள் தெற்றென விளங்கிக் கிடப்பவும், பகலவனை இருட்படலம் மறைக்க முயன்றாற் போல வணவர் சிலர் இதனை சிலர் இதனை மறைத்து, முழுமுதற் கடவுளல்லாத மாயவனை முழுமுதற் கடவுளாக்கி முழுமுதற் கடவுளான சிவபிரானைத் தேவரினுங் கடைப் பட்டவனாக்க முயன்றது, அவர் செய்த தீவினையால் அவரது சிற்றறிவுதானும் ஆணவவல்லிருளிற் புதைந்து மயங்கின மையினையே விளங்கக் காட்டுகின்றது; வடமொழியறியாத பொது மக்களை ஏமாற்று தற்பொருட்டு வைணவர் மேலை இரண்டாம் மந்திரத்திற்குக் கட்டிச்சொன்ன பொருள் வடமொழியுணர்ந்தார் எதிரில் வறும் பாழாய் முடியுமென்க.

நாயகரவர்கள் இவ்விடத்தே சுருங்கச் சில சொற்களில் மறுத்துக்கூறிய மெய்யுரை மெய்ப்பொருள் பொதிந்ததாதலை மேலே யாமுஞ் சுருக்கமாகவே விளக்கிக் காட்டினாம். இதன்விரிவை யாம் இயற்றிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், சைவசித்தாந்த ஞானபோதம், தமிழர்மதம் என்னும் விரிந்தநூல்களிற் கண்டு கொள்க.

மிகப்

இ னிச், சிவபெருமானே வேள்விமுதல்வன் (யாகபதி) ஆவன் என்னும் உண்மையினை ஆ ஆரியத்தில் பழைய நூலாகிய இருக்குவேதத்தி லிருந்தெடுத்த “காதபதிம் மேதபதிம் ருத்ரம் ஜலாஷபேஷஜம், தத்சம்யோ: சம்நம் ஈமஹே” (1, 43, 4) என்னும் மந்திரத்தால் நாயகரவர்கள் நன்கு வலியுறுத்திக் காட்டியிருக்கின்றார்கள். இம் மந்திரமானது, 'பாட்டுகளுக்குத் தலைவனும் வேள்விகளுக்கு முதல்வனும், நோய்தீர்க்கும் மருந்துகளுக்கு உடையவனும் ஆன உருத்திரனது திருவருளைப் பெறும்பொருட்டு அவனை நாடுகின்றோம்’ எனப் பொருள்பயந்து சிவபெருமானே பாட்டுகளுக்கும்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/212&oldid=1587319" இலிருந்து மீள்விக்கப்பட்டது