உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

180

மறைமலையம் – 21

வேள்விகளுக்குந் தலைவனாதலுடன், அவனே மும்மலப் பிணிதீர்க்கும் மருந்துகள் உடை யானுமாய் (வைத்திய நாதனாய்)த் திகழ்தலையும் நன்கு விளக்கிக் காட்டுதல் நினைவிற் பதிக்கற்பாற்று. இவ்விருக்குவேத மந்திரத்தினுஞ் சிறந்ததும் பழமையாவதும் பிறிதில்லை. இன்னும் அவ் விருக்குவேதமே, ஆவோராஜா நமத்வரஸ்யருத்ரம்.... அவஸேக்ருணுத்வம்” (4, 3, 1) என்னும் மந்திரத்தால் வேள்விகளுக்கு வேந்தனாவான் உருத்திரனேயென்றும், உங்களைக் காக்கும்பொருட்டு அவனையே நாடுதல் வேண்டுமென்றும், அறிவுறுத்துகின்றது. இன்னும், அது சிவபெருமானை விளித்து இருபத்தொரு வேள்விகளும் உம்மிடத்தே வைக்கப்பட்டிருக்கின்றன” (1,72, 6) எனப் பகர்கின்றது. மேலும், “அக்நியேருத்ரன்” என அவ் வேதம் புகல்வதாலும், அதற்கிணங்கவே திருநாவுக்கரசுநாயனாரும்.

66

"எரிபெருக்குவர் அவ்வெரி ஈசன

துருவருக் கமதாவ துணர்கிலார்”

66

என அருளிச்செய்திருத்தலானும், தீயையின்றி வேள்வி வேட்டல் இன்மையானும், வேள்வியென்பது ஒளிவடிவாக விளங்கும் உருத்திரனைத் தீவடிவின்கண் வைத்து வழிபாடு ஆற்றுதலே யன்றி வேறின்மையானும் “யாகபதி” சிவபெருமானேயாவனென இரு க் கு வேதம் பலகாலும் எடுத்து வற்புறுத்துரைத்தது வாய்வதே யாம் என்க. இவ்வாற்றால், வேள்விமுதல்வனாந் தன்மை சிவபெருமானுக்கே உரித்தாவதன்றி, நம்போற் பிறந்திறக்கும் மாயவன் நான்முகன் முதலான ஏனையோர்க்கு உரித்தாகாமை யுணர்ந்து கடைப்பிடிக்க.

ன்னம், எவரெவர் எந்தெந்தத் தேவர்களை நோக்கி வேள்வி வேட்பினும், அவை தம்மையெல்லாம் வேள்வி முதல்வனான சிவபிரானே ஏற்று, அங்ஙனம் ஏற்குமாற்றால் அத் தேவர்களின் உயிர்க்குயிராய் நிற்குந் தானே அவர்களை உவப்பிப்பன் என்னும் உண்மையினையும் பின்னர் நாயக ரவர்கள் நன்கு விளக்கியிருக்கின்றார்கள். அருச்சுனன் தான் சிவபிரான் வழிபாடு செய்தற்குரிய காலம் அண்முதலுஞ், சிவலிங்க வடிவம் இல்லாக் குறையினை நினைந்து வருந்தக், கண்ணன் தன்னையே சிவலிங்கவடிவாய்க் கருதி வழிபாடு ஆற்றுக என்று கற்பிக்க, அவனும் அங்ஙனமே செய்து, பின்னர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/213&oldid=1587320" இலிருந்து மீள்விக்கப்பட்டது