உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

சோமசுந்தர நாயகர் வரலாறு திருக்கைலாயஞ் சென்று சிவபிரான் திருவுருவத்தை நோக்கியவழித், தான் கண்ணன்மேலிட்ட போதுகள் அத்தனையுஞ் சிவபிரான் திருமேனிமேல் இருத்தல் கண்டு வியப்புற்றனன் என மாபாரதங் கூறுதலின், எந்தத் தேவரை நோக்கி எவ்வழிபாடு செய்யினும், அவ் வழிபாட்டை அத் தேவரின் உயிர்க்குயிராய் நிற்கும் மாதேவனே ஏற்று அருள்செய்வனென்பது பெறப்படும்.

இன்னும், உருத்திரமூர்த்தியாகிய சிவபெருமானை, இந்திரன் நான்முகன் நாராயணன் முதலான ஏனைச் சிறுதெய்வங்களோடு ஒப்பவைத்து வணங்குதலாலுந் தீய வாழ்த்துதலாலும் அழைத்தலாலும் அவரது சீற்றத்திற்கு யாம் ஆளாகமாட்டோம் எனக் கிளக்கும் இருக்குவேத இரண்டாம் மண்டிலத்து 33-ஆம் பதிகத்து நான்காம் மந்திரமாகிய,

“மாத்வா ருத்ர சுக்ருதாம நமோபிர் மாதுஷ்டுதீ வ்ரிஷபமா ஸஹூதி”

என்பதனை எடுத்துக்காட்டிய நாயகரவர்கட்குச் சைவவுலகம் யாது கைம்மா றியற்றவல்லது? இவ்விரண்டாம் மண்டிலத்து மூன்றாம் மந்திரம்,

"சிரேஷ்டோ ஜாதஸ்யருத்ர ச்ரியா ஸிவஸ்தமஸ் தவஸாம் வஜ்ர பாஹோ'

وو

என்பது உருத்திரமூர்த்தியே எல்லாத் தேவர்களினும் மேலான புகழுடையரெனவும், வலியவர்கள் எல்லாரினும் மேலான வலிமை வாய்ந்தவரெனவும் நன்கெடுத்துக் கூறுதலால், உருத்திரசிவத்திற்கு மேலான அல்லது ஈடான தெய்வம் ஏதுமே இல்லையென இருக்குவேதமே அறுதியிட்டு விளக்குதலாலும், இவ் வேதத்தினுஞ் சிறந்த பழைய வடநூல் ஏதுமில்லாமை யாலும், பண்ை க் காலந்தொட்டு நம்மிந்துமக்கள் சிவபெருமானை ஒளிவடிவில் வைத்து வணங்கிவருதலாலும் அவனைத் தவிர வேறொரு தெய்வத்தை வேள்விமுதல்வன் (யாகபதி) எனக் கோடல் அவர்க்குடம் பாடாகாமை உள்ளங்கை நெல்லிக்கனிபோற் றெள்ளிதில் விளங்கா நிற்குமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/214&oldid=1587321" இலிருந்து மீள்விக்கப்பட்டது