உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

❖ 21❖ மறைமலையம் – 21

தேவர்களினும்

உயர்ந்த

இங்ஙனமாக எல்லாத் சிவபெருமானே முழுமுதற் கடவுளும் வேள்விகளுக்குத் தலைவனும் ஆதலால், எந்தத் தேவரை நோக்கி எத்தகைய வேள்வி வேட்பினும் முதலிற் சிவபிரானை அழைத்து அவற்கு அவியுணவு செலுத்திய பின்னரே, மற்றைத் தேவரை வருவித்து அவர்க்கு அவியுணவு தரும் வழக்கம் வேள்வியாசிரியராற் கையாளப்பட்டு வருகின்றது. இதனாலும், உருத்திரனே வேள்விமுதல்வனென்பது பெறப்படாநிற்கும்.

சிவபெருமான்மேற்

இன்னும், நான்முகன் மாயன் மாயன் இந்திரன் முதலான தேவர்களின் துணையை நம்பிச் பகைகொண்டு தருக்கிய தக்கன், சிவபெருமானை இகழ்ந்து ஒதுக்கிச் செய்த பெருவேள்வியானது, அவரால் தகர்த்து அழிக்கப்பட்ட செய்தி, நால் வேதங்களில் ஒன்றான கிருஷ்ண யஜுர் வேதத்தின் 'தைத்திரீய சங்கிதை’யிலும் (2, 6, 8, 3) சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்த ‘சதபத பிராமணத்’திலும் (1, 7, 3, 1) நன்கெடுத்து நுவலப்பட்டிருக்கின்றது. வைணவ மதம் உண்டாதற்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட இப் பழைய நூல்களிற் சொல்லப்பட்ட இச் செய்தி, சிவபிரானே முழுமுதற் கடவுளாதலை நன்கு நிறுவி, அவனை விலக்கியோ அல்லது அவனை மறந்தோ மற்றைத் தேவரை நோக்கிச் செய்யும் எத்தகைய வேள்வியும் அழிந்து பாழாதலைத் தெற்றென விளக்கா நிற்கின்றது. இவ் வேதநூற் பொருளு முழுதும் ஒத்தே, இடைக்காலத் தெழுந்த மாபாரத அநுசாசன பர்வமும் அந் நிகழ்ச்சியினைக் கூறுகின்றது; அது வருமாறு:

க்கு

ன்

"கண்ணபிரான், தருமன் புதல்வனான உதிட்டிரனை நோக்கிக் கூறுவான்: சடை முடியைத் தாங்கினவரான மகாதேவரைக் கீழ்வீழ்ந்து வணங்கி, யான்பெற்ற பேற்றினையும் பெரும்புகழையும் நுமக்கெடுத்துப் புகல்கின்றேன். ஓ வேந்தனே, கேளும், யான் காலையில் எழுந்தவுடனே கைகளைச் சேர்த்துக் கூப்பிக்கொண்டு சதருத்ரீயத்தை மன வொருமையுடன் பாராயணஞ் செய்கின்றேன். சிறந்த அடியவனான பிராசாபதி தான் ஆற்றிய தவமுடிவில் அவ்வணக்கவுரையினை உண்டாக் கினன். சங்கரனே இயங்கு முயிர், நிற்குமுயிர் எல்லாவற்றையுந் தோற்றுவித்தனன். ஓ மன்னனே, மகாதேவனுக்கு மேலானது ஏதுமே யில்லை; ஏனென்றால், இம் மூவுலகங்களிலும் அவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/215&oldid=1587322" இலிருந்து மீள்விக்கப்பட்டது