உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

எத்தனைமுறை

மறைமலையம் – 21

எம்மைப் படைத்துப்

படைத்துக்

கைசலிக்கின்றான்! இது பற்றியன்றோ,பட்டினத்தடிகளும்,

து

"மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவுங் கைசலித்து விட்டானே--நாதா

அருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னைக்

கருப்பையூர் வாராமைக் கா

و,

என்று அருளிச் செய்தனர்கள். இவ்வுலகத்தில் நாம் வந்து பிறந்ததெல்லாம் மெய்யுணர்வு பெறுதற்கேயாம். இவ் உலக வாழ்க்கையானது நமக்கு ஒரு பள்ளிக்கூடாமா யிருக்கின்றது. பள்ளிக்கூடத்திற் கல்விபயிலும் மாணவர்கள் ஆசிரியன் உதவி கொண்டு மெய்ந்நூல்கள் பலவற்றைப் பயின்றும், தம்மொடு பயிலும் மாணாக்கர்களுடன் கல்வித்துறைகளை உசாவி ஐயந் தீரப்பெற்றும் அறிவு விளங்கி வருதல் போல, நாமும் இவ் உலக வாழ்க்கைத் துறைகள் ஒவ்வொன்றிலும் பேரறிஞர் பற்பலரின் உதவியால் உண்மைகள் பற்பலவற்றை உணர்ந்தும், நம்மோ டொத்த மக்கள் ஓவாது செய்யும் பலதிற முயற்சிகளாற் பல திற வாழ்க்கை நலங்களைப் பெற்றும் நாளுக்கு நாள் அறிவிலும் இன்பத்திலும் மேன்மேற் சிறந்து வருகின்றனமல்லமோ?

இவ்வாற்றால் நம்மைப் பழமை தொட்டுப் பற்றிக் கொண்டு வரும் அறியாமையும் அதன் வாயிலாக வருந் துன்பமும் படிப்படியே நீங்கப் பெற்று வருகின்றோம். இங்ஙனமாக அறியாமை நீக்கமும் அறிவுப்பேறும் அடைதலே ப்பிறவி எடுத்ததன் நோக்கமாய்க் காணப்படுதலின், அவ் அறியாமையைக் களைந்து அறிவு பெறுதற்குரிய உண்மைக் கோட்பாடுகளையே நாம் ஆராய்ந்து கைக்கொள்ளல் வேண்டும் என்பது பற்றிக் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்பதனை நுங்கள் முன்னிலையிற் பேசத் துணிந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/235&oldid=1587342" இலிருந்து மீள்விக்கப்பட்டது