உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

யாவை

2. கடவுள் எல்லாவற்றையும்

கடந்து நிற்கும் நிலை

இனி, எடுத்துக் கொண்ட இப்பொருளைக் கடவுள் நிலை யாதெனவும், அந்நிலைக்கு மாறான கொள்கைகள் யெனவும், அம்மாறான கொள்கைகள் சைவ மாகாதவாறு யாங்ஙனமெனவும் மூன்றுவகையால் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். இங்ஙனம் ஆராயும் இவ் ஆராய்ச்சி மிக உயர்ந்த உண்மைப் பொருள்களைத் தெளிவதில் நமது கருத்தை ஈடுபடுத்தி நிற்றலால், இப்போது நாம் தவ முயற்சியைச் செய்யப் போகும் நிலையில் இருக்கின்றோம். னென்றால் தவம் என்பது உயர்த பொருளில் நமது கருத்தை ஒருமுகப்படுத்தி உறைத்து நிற்றலேயாதலால், இப்போது நாம் தவ முயற்சியைத் துவங்கி நிற்கின்றோம் என்பதனை நினைந்து, ஒருவரோடொருவர் பேசாமலும் மற்ற வீணெண்ணங்களை எண்ணாமலும் நாம் பேசும் பொருளிலேயே கருத்தை நிறுத்தி அமைதியாய் இருத்தல் வேண்டும்.

இனி, முதலாவதாகக் கடவுள் நிலையை ஆராய்ந்து பார்ப்போம். கடவுள் என்னுஞ் சொல்லைக் கேட்ட அளவானே அஃது எப்பொருளையுங் கடந்து நிற்பது என்னும் பொருள் புலனாகா நிற்கின்றது. இனிக் கடவுள் எப்பொருளைக் கடந்து நிற்கின்றார் என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து இவ் உலகத் தையும் இவ் உலகத்தில் வாழும் உயிர்களையும் கடந்து நிற்கின் றார் என்றே நாம் சொல்லுதல் வேண்டும். நம்மறிவால் முதலில் அறியப்படுவது இவ்உலகமேயன்றிப் பிறிதில்லை. இவ் உலகந் தான் எங்ஙனம் ஆக்கப்பட்டிருக்கின்றது என்று மேலும் ஆராய்ந்து பார்க்குமிடத்து மண்ணுந் தண்ணீருந் தீயுங் காற்றும் வானு மென்னும் ஐம்பெரு முதற்பொருள்களால் ஆக்கப்பட்டி ருத்தல் விளங்கும். இவ் உண்மையை இற்றைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/236&oldid=1587343" இலிருந்து மீள்விக்கப்பட்டது