உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

❖ - 21❖ மறைமலையம் – 21

ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னமே இருந்த நம் பழந் தமிழாசிரி யரான தொல்காப்பியனார்,

“நிலந் தீ நீர் வளி விசும்போடு ஐந்துங்

கலந்த மயக்கம் உலகமாதலின்.

என்றும், இவர் காலத்துக்கு ஐந்நூறு ஆண்டு பிற்பட்டு வந்த தலைச் சங்கத்து நல்லிசைப்

புலவரான

முரஞ்சியூர் (புற - நா -2)

முடிநாகராயர்,

“மண்திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயுந்

தீமுரணிய நீருமென்றாங்கு

ஐம்பெரும்பூதத்து இயற்கைபோல."

என்று கூறுதல் கொண்டு உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு ஐயாயிர ஆறாயிர ஆண்டுகட்கு முன்னமே இவ் உலகத்தினியல்பினை நன்காராய்ந்து ஐந்து முதற் பொருள் களிலடக்கிய நம் பழந்தமிழாசிரியரின் பேரறிவுப் பெற்றியை என்னென்று கூறுவேன்! எங்ஙனம் புகழ்வேன்! அன்பர்களே!

இனி, இங்ஙனம் பகுக்கப்பட்ட இப்பொருள்கள்

ஐந்தையும் நாம் எங்ஙனம் அறிகின்றோம் என்றாற், செவியின் உதவி கொண்டு ஓசையை உணர்கின்றோம். இவ் ஓசையோ வ் வானின் தன்மை. ஒசையை உணரவே அவ் ஓசைக்கு நிலைக் களனாய்க் கட்புலனாகாத வானத்தையும் அறிகின்றோம். கண்ணினுதவி காண்டு தீயின் தன்மையான ஒளியை உணர்கின்றோம். இத் தீயில் ஒளியேயன்றிச் சூடு முண்டாத லின் அச் சூட்டினை உடம்பி னெல்லா வுறுப்புக்களாலும் உணர்கின்றோம். னிக் காற்றின் தன்மையினையும் அங்ஙனமே உடம்பின் எல்லா வுறுப்புக்களாலும் உணர் கின்றோம். வாயின் உதவி கொண்டு நீரின் சுவையினையும்

மூக்கின் உதவிகொண்டு மண்ணின் நாற்றத்தினையும்

உணர்கின்றோம். இவ்வாறாக வான் வளி தீ நீர் மண் என்னும் தீ ஐம்பெரும் பொருள்களையும் நாம் அறிந்து கொள்ளுதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/237&oldid=1587344" இலிருந்து மீள்விக்கப்பட்டது