உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

205

இவ்

உதவியாக மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளையும், அவ் ஐம்பொறிகளமைந்த வுடம்பினையும் எல்லாம்வல்ல இறைவன் நமக்குப் படைத்துக் கொடுத்திருக்கின்றார். இவ் ஐம்பொறிகள் இல்லாவிட்டாலும் அல்லது இவை சிறிது பழுதுபட்டாலும் நாம் உலகத்துப் பொருள்களை அறிதலும் அவற்றாற் பயன் கொள்ளுதலுஞ் சிறிதும் இயலா. செவி இல்லையாயின் அல்லது செவியிருந்தும் அது பழுதுபட்டுப் போனதாயின் நாம் ஓசையை உணர்வ தெங்கே! கண் இல்லையாயின் அல்லது கண்ணிருந்தும் அது பழுதுபட்டுப் போகுமாயின் ஒளியினையும் அவ் ஒளியினால் விளக்கப்படும் பலதிறப் பொருள்வடிவங் களையும் நாம் காண்ப தெங்கே! இங்ஙனமே மற்றைப் பொறிகள் இல்லையாயின் அல்லது அவை யிருந்தும் பழுதுபட் வாயின் அப்பொறி களால் அறியப்படும் பொருள்களை நாம் அறிந்து கொள்ளுதல் காள்ளுதல் இயலாதன்றோ? இயலாதன்றோ? அன்பர்களே! இங்ஙனம் பொறிகளின் உதவியின்றி அறிய மாட்டாத நிலையி லிருக்கும் ஏழை மக்க ளாகிய நாம் சிற்றறிவுஞ் சிறுதொழிலுமுடைய சிற்றுயிர்களே யல்லாமற் கடவுளாதல் யாங்ஙனம்? சிலர் உயிர்களே கடவு ளென்று வாய்கூசாமற் சொல்லுகின்றார்கள். உயிர்களோ கடவுளாயின் ஐம்பொறி களின் உதவியின்றியே அவ் வுயிர்கள் ஐம்பொருள்களையும் உணர்தல் வேண்டுமன்றோ? ஆதலால் உயிர்களே கடவுள் என்னும் கொள்கை பிழைபாடுடைத்தாகும்.

டன

னி, இங்ஙனம் ஐம்பொறிகளால் ஐம்பொருள்களை அறியுமிடத்து அங்ஙனம் அறியும் அறிவு அவற்றை அறிந்த அளவிலே அற்றுப் போகுமானால் நமக்கு அறிவு விளக்க முண்டாகாது; அறியாமை நீங்காது; விலங்குகளினும் நாம் கீழ்ப்பட்டவர்களாய் விடுவோம். நாம் பொருள்களை அறிந்த அறிவு அவ்வளவிலே அற்றுப் போகாமல் நம் நினைவிலே பதிந்து நின்று அப்பொருள்களின் தன்மைகளை நம் நினையில் தொடர்பாக வைத்து அறிவித்து வருகின்றது. நேற்று நாம் கேட்ட சொற்களையும் நேற்று நாம் கண்ட காட்சிகளையும் உண்ட உணவுகளையும் நேற்றளவிலேயே மறந்து, இன்று கேட்குஞ் சொற்களையுங் காணுங் காட்சிகளையும் உண்ணும் உணவுகளையும் புதிது புதிதாக அறிந்து அறிந்த அந் நொடியி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/238&oldid=1587345" இலிருந்து மீள்விக்கப்பட்டது