உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் – 21

லேயே அவை தம்மை மறந்து விடுவோமாயின் நமது நிலை எவ்வளவு உதவியற்றதாய், எவ்வளவு இரங்கத்தக்கதாய் இருக்கும்! பார்மின்கள் அன்பர்களே! இங்ஙனம் மறவாதபடி, எல்லாம் வல்ல ஆண்டவன் நாம் அறிந்தவைகளை மறவாத நினைவினை எவ்வளவு இரக்கத்தோடு நமக்கு அளித்திருக்கின் றான்! நாம் பொறிகளால் அறிந்த பொருள்கள் அழிந்து மறைந் தாலும், அப் பொருள்களைப் பற்றிய நினைவுகள் எம் உள்ளத் தில் எவ்வளவு வேரூன்றி நிற்கின்றன! யாம் எங் கண்ணெதிரே காணும் இம் மண்டபம் ஒரு காலத்தில் இல்லையாய் மறைந் தாலும், இதனைப் பற்றிய நினைவு எம் அகக் கண்ணெதிரே இதனை எமக்குத் தெளிவுறக் காட்டுமன்றோ? அல்லது இம் மண்டபத்தை விட்டு வேறோரிடத்திற் சென்ற பின்னும் எமக்கு இம் மண்டபத்தைப் பற்றிய நினைவு வருமன்றோ? இங்ஙனமே ம் இம்மக்கள் வாழ்க்கையில் இதுவரையிற் கழிந்துபோன முன்னாட்களிலே நாம் அறிந்தறிந்து வந்த பொருள்களின் நினைவுகளெல்லாம் நம் உள்ளத்தில் அழுத்தமாய்ப் பதிந்து நாமொன்றை நினைப்பதற்கு அறிவை ஒருமுகப் படுத்திக் கண்மூடியிருக்குங்கால், அப் பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாய் ஒரு தொடர்பாயுந், தொடர்பின்றிக் கலைந்தும் பல திறப்பட்டு மாறி மாறி வரப்பெறுகின்றன மல்லமோ? இதனாலன்றோ,

“உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடிநினைந் தெண்ணுவன

என்று ஔவையாரும்,

“கண்டன எலாம் அல்ல என்றுகண் டனைசெய்து கருவிகர ணங்க ளோயக்

கண்மூடி ஒருகண மிருக்கவென் றாற்பாழ்த்த கர்மங்கள் போராடுதே"

என்று தாயுமான அடிகளும் அருளிச்செய்வாராயினர்.

என்று இத்துணை ஆராய்ந்தவளவில் நம்மால் அறியப் படும் பொருள்களென்பன மண் புனல் அனல் கால் வான் என்னும் உலகத்துப் பொருள்களைந்தும், பொறிகளின் வாயிலாக நம் உள்ளத்தில் வந்து பதியும் இவ் ஐம்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/239&oldid=1587346" இலிருந்து மீள்விக்கப்பட்டது