உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

207

களைப் பற்றிய நினைவுகளும் என்னும் இரண்டுமே யல்லாமல் வேறில்லை என்பது இனிது விளங்காநிற்கும். ஆகவே, கடவுள் எல்லாப் பொருள்களையுங் கடந்து நிற்பவரென்றால், நம் ஐம்பொறிகளுக்கு விளங்கும் ஐம்பெரும் பொருள்களையும் அப் பாருள்களைப் பற்றி யெழும் நினைவுகளையுங் கடந்து நிற்பவரென்றே முடிவு செய்யப்படும். ஏனென்றாற் கடவுள் நாமறிந்த மண்ணில் ஒருவரா? அல்லது நீரில் ஒருவரா? தீயில் ஒருவரா? காற்றில் ஒருவரா? அல்லது இடைவெளியா யிருக்கின் றனரா? என்று கேட்போமாயின் எவரும் இப் பொருள்களைக் கடவுளென்று சொல்ல ஒருப்படமாட்டார். அல்லது இப் பொருள்களைப் பற்றி நம் உள்ளத்தி லெழும் எத்தனையோ கோடி நினைவுகளில் வந்த நினைவு கடவுளாகும் என்று கேட்டால், எந்த நினைவினையுங் கடவுளென்று சொல்ல எவரும் ஒருப்படமாட்டார். எனவே, உலகத்துப் பொருள்கள் எதனுள் ளுங் கடவுள் அடங்காமல், அவைகளையெல்லாம் அவர் கடந்து நிற்பவர் என்பதே எல்லா

.

மக்கட்கும் உடம்பாடான பொது உண்மையாகும். நம் சமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனாரும்,

“விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத

விதியல்லர் விண்ணு நிலனுந்

ணு

திரிதரு வாயுவல்லர் செறிதீயு மல்லர் தெளிநீரு மல்லர்'

என்று இவ்வுண்மையை இனிது விளக்கி அருளிச் செய்தி ருக்கின்றார்கள்.

இனி, இவைகளையெல்லாம் இறைவன் கடந்து நிற்பவன் என்றால், எந்த வகையினால் இவைகளைக் கடந்து நிற்பவன் என்பது ஆராய்ந்து தெளிதல் வேண்டும். கடத்தலென்பதை மூன்று வகையாகப் பாகுபடுத்தல் வேண்டும். அவை: இடத்தைக் கடப்பதுங், காலத்தைக் கடப்பதும், பொருட் டன்மைகளைக் கடப்பதும் என்பனவாம். அவற்றுள் இடத்தைக் கடப்பதாவது பொருள்களெல்லாமிருக்கும் எல்லா இடத்தையுங் கடந்து நிற்பதேயாகும். நம்மா லறியப்பட்ட எந்தப் பொருள்களின் எல்லையில் அல்லது எந்த இடத்தின் எல்லையிற் கடவுளை அடக்கலாம் என்று எவரைக் கேட்பினுங் கடவுள் எந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/240&oldid=1587347" இலிருந்து மீள்விக்கப்பட்டது