உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் – 21

பொருளின் எல்லையிலும் அடங்கார், எந்த இடத்தின் எல்லையிலும் அடங்கார் என்றே விடை கூறா நிற்பர். ஆதலாற் கடவுள் இடத்தைக் கடந்து நிற்பவர் என்பது எல்லா மக்கட்கும் ஒப்ப முடிந்ததேயாகும்.

னிக், காலத்தைக் கடந்தவர் என்பது முக்காலத்தையுங் கடந்து நிற்பவர் என்பதேயாம். அவர் எந்தக் காலத்தில் தோன்றினவர், எந்தக்காலத்தில் வளர்கின்றவர், எந்தக் காலத்தில் முடிவடைபவர் என்று எவரைக் கேட்பினும், அவர் ஒருகாலத்திற் றோன்றியவருமல்லர், மற்றொருகாலத்தில் வளர்பவருமல்லர், பிறிதொருகாலத்தில் முடிபவருமல்லர் என்றே எல்லாரும் விடை கூறாநிற்பர். அது பற்றியே,

“எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம் சொல்லாற் றெளிந்தேம்நஞ் சோணேசர்-இல்லிற் பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டு இறந்தகதை யுங்கேட்டி லேம்.”

என்று ஆன்றோர் திருமொழியும் எழுந்தது.

இறைவன் எல்லாவற்றிற்கும் முற்பட்ட காலந்தொட்டே இருப்பவன் என்று கூறுதலுங்கூட அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காம் என்பது பற்றியே மாணிக்கவாசகப் பெருமான்,

"முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

என்றும்,

"மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் வீப்பான்

என்றும் அருளிச் செய்வாராயினர்.

இனிப் பொருள்களின் தன்மையைக் கடந்தவரென்பது, அவ்வப் பொருள்களின் இயல்புகளிலுந் தம் மியல்பு அடங்காமல் அவ்வெல்லாவற்றின் இயல்புகளையும் முற்றுங் கடந்து நிற்பவர் என்பதேயாம். இனிப் பொருள்களின் இயல்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/241&oldid=1587348" இலிருந்து மீள்விக்கப்பட்டது