உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

3. மாணிக்கவாசகர் அருளிச்செய்த “கேட்டாரும் அறியாதான்”

என்னுஞ் செய்யுளின் உரை

இவ்வாறெல்லாம்

வ் உலகத்திலுள்ள

கடவுளின்

எல்லா

பொது

மக்கட்கும் சைந்ததாகிய இலக்கணத்தையும், அங்ஙனம் எவர்க்கும் எட்டாதவராய் எல்லாம்வல்ல இறைவன் இருப்பினும் ம் எம்போன்ற சிற்றறிவினார்க்குக் காணவுங் கருதவும் படாத அக் கடந்த நிலையிலேயே அவன் நிற்பனாயின் அவனது திருவரு ளுதவியின்றி இப்பிறவித் துன்பத்தை, இப்பிறவி வித்துக்கு மூலமான அறியாமையை யாமே நீக்கிக் கொள்ள மாட்டாமையால் அவன் தாயினும் மிக்க இரக்கமும் அன்பும் வைத்து எம்மனோர்க்கு எளிவந்து தோன்றி அருள் செய்யும் சிறப்பிலக்கணத்தையும் ஒருங்கு விளக்கி நம் சைவ சமய முதலாசிரியரான மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்திருக்கும் ஒரு திருப்பாட்டினை ஈண்டு ஆராய்ந்து பார்ப்போமாக. அத் திருப்பாட்டு வருமாறு:

“கேட்டாரு மறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெலாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்

எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே.”

அருமருந்தன்ன இச் செய்யுளின்கண் நாமெடுத்துக் கொண்ட இவ்விரிவுரைப் பொருளின் முதற்கண்ணதாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/244&oldid=1587351" இலிருந்து மீள்விக்கப்பட்டது